இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சத்தியம் என்பது என்ன செய்கிறது மற்றும் யாரைத் தேடுகிறது என்பதில் தெரிகிறது. நாம் ஒளியின் பிள்ளைகளாக வாழ்வோம்,. ஒருவரும் காணக்கூடாத மற்றும் மகிமையான ஒளியில் தாபரிக்கும் தேவனை தேடுவோம், அதினால் நாம் இவ்வுலகிற்கு ஒளியாக இருப்போம் .

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் ஒளியின் பிதாவே , நான் அடியேனைஉமது சமூகத்தில் ஒப்புவிக்கும்போது , எனது குறைபாடுகள், தோல்விகள் மற்றும் பாவம் ,ஆகியவற்றை ​​​​நீர் மென்மையாக திருத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் உம்முடைய பார்வையில் கறையற்றவனாகவும் பரிசுத்தமானவனாகவும் குற்றமற்றவனாகவும் இருக்க இயேசுவின் இரத்தத்தால் என்னை மன்னித்து சுத்திகரியும். ஆண்டவரே, நான் மன்னிக்கப்படுவதை மட்டும் விரும்பவில்லை, உமக்கும் உம்முடைய திருச்சபைக்கும் பயனுள்ளவனாக இருக்க விரும்புகிறேன். அடியேன் பயன்படும்படியான எனது வழியைக் கண்டறிய எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து