இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவை முழுமையாக பின்பற்றுவதிலும், ஊழியஞ் செய்வதிலும் நம்மை பின் நோக்கி இழுக்கும் அனைத்து காரியங்களையும் தள்ளி வைத்து, தீவிரமாக நம் இருதயத்தை பார்க்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். அவை என்னவென்று நமக்குத் தெரியும். நம்மை மீட்பதற்காக அவர் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தார் என்பதை அவருடைய கைகளில் ஆணிகளினால் உண்டான தழும்புகளுடன் இப்போது நம்மிடம் வந்து நினைப்பூட்டுகிறார். நம்மைத் தடுத்து நிறுத்தும் விஷயங்களை நாம் இப்போது சிலுவைக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதை இன்றே செய்வோம்!

என்னுடைய ஜெபம்

பிதாவாகிய தேவனே, சர்வ வல்லமையுள்ள இராஜாவே, உம்முடைய ஆவி கிரியை செய்து எனக்குள் வளர்க்கிறதான நீதியிலிருந்து மறைந்து கொள்ளுகிறதான என்னுடைய வாழ்க்கையின் பகுதிக்காக அடியேன் வருந்துகிறேன். இப்பொழுதும் அடியேனுடைய அந்தரங்க பாவங்களை உம்மண்டையில் அறிக்கையிட்டு அதிலிருந்து பரிசுத்தம் செய்யும்படி கேட்கிறேன், அதுமட்டுமல்லாமல் சாத்தானுடைய வல்லமையின் கட்டிலிருந்தும், உம்முடைய குமாரனுடைய ஊழியத்திலே முழு இதயத்துடன் செய்கிற காரியத்திலே வரும் தடைகளிலிருந்தும் என்னை விடுவிக்கும்படி கேட்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து