இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சிலர் மாத்திரமே ஏழைகளின் கூக்குரலைக் கேட்கிறார்கள் அல்லது எளியவர்களின் இக்கட்டான நிலையில் பதில் செய்கிறார்கள் . நாம் நம் பிதாவின் மெய்யான பிள்ளைகளாக இருக்கப் போகிறமென்றால், அவருடைய குணாதிசயம் நம்முடையதாக ஆக வேண்டும், அவரது காணாமல் போன ஆடுகள் நம் தேடலாக மாற வேண்டும். நம்மைச் சுற்றியுள்ளவர்களில் யாரெல்லாம் தேவையில் உள்ளார்களோ அவர்களுக்கு உதவுவோம். அவர்கள் தேவனைக் நோக்கி கூப்பிடும் போது அவர்களுடைய தேவைகளை கண்டடைவார்கள், அவர்கள் மறக்கப்படுவதில்லை என்பதை உணர்த்துவோம் , நாம் அவருடைய கிருபையை மற்றவருக்கு கொண்டு சேர்ப்பவராய் இருப்போமாக.

என்னுடைய ஜெபம்

கிருபையும், பரிசுத்தமுள்ள பிதாவே, அடியேனை உம்முடைய கிருபையை கொண்டு சேர்க்கும் பணியில் தயவுகூர்ந்து உபயோகித்தருளும். இயேசுவின் நாமத்திலே நீர் கொடுத்த கிருபையின் ஈவுக்காக நன்றி. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து