இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எங்களுடைய ஒப்பில்லாத தேவனை யாருடன் ஒப்பிடுகிறீர்கள்? எல்லையுள்ள மனதுடன் எல்லையற்ற தேவனை எப்படிப் புரிந்துகொள்வது? மகத்துவத்தின் உச்சம் நீங்கள் சிந்திக்கும் தேவனாக இருக்கும்போது, ​​வேறு எதை குறித்து உங்களால் எப்படி வல்லமையாய் பேச முடியும்? தேவன் நமது பெருமைகளை அற்றுப்போக பண்ணுகிறார் . தேவனின் மகிமை நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது . தேவனின் மகத்துவம் நம் நினைகிறதை விட அதிகமாக உள்ளது. அவரை நாம் அறியவோ, முழுமையாக விவரிக்கவோ அல்லது முழுமையாகப் புரிந்துகொள்ளவோ ​​முடியாத அளவுக்கு அப்பாற்பட்டவர். ஆயினும்கூட, தேவனின் ஆச்சரியமான அதிசயம் என்னவென்றால், அவர் தன்னுடைய ஒரே பேறான குமாரனை அடிமையின் ரூபம் எடுக்கும்படி ஒப்புக்கொடுத்தார் , அன்பான பெற்றோரால் துணியால் மூடப்பட்டு, அவர்களுக்கு இடமில்லாததினால் ஒரு முன்னணையிலே வைத்தனர் (பிலிப்பியர் 2:6-11; லூக்கா 2:7). சில சமயங்களில் எல்லா அதிசயங்களிலும் மிகப் பெரியவையாயிருக்க நமது மிக முக்கியமான மற்றும் சிறந்த வார்த்தைகள் தேவைப்படுவதில்லை. சில சமயங்களில், மிகவும் குறிப்பிடத்தக்க அதிசயங்கள் எப்பொழுதும் நம் இருதயங்களைக் ஆளுகை செய்கிறது .

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , எங்கள் மீதான உம் மாபெரிதான அன்பை எப்படிப் புரிந்துகொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. உம் குமாரனகிய இயேசுவின் மூலமாய் இவ்வுலகிலே உம்முடைய அன்பை எப்படி காண்பிக்க முடியும்? மந்திரவாதிகளைப் போல, ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்மை வணங்கி துதிக்கிறேன் , உம்மை அனுப்பிய எங்கள் பிதாவாகிய தேவனை தொழுதுக்கொள்ளுகிறேன். தேவனே , உம்மைப்போல யாருண்டு ? யாரும் அருகில் கூட இல்லை. ஆனாலும், உனது கிருபையால் மாத்திரமே தெரிந்த காரணத்தால், எங்களை நெருங்கி, உமக்கே சொந்தமாக்கிக் கொண்டாய். உம்முடைய மகிமைக்காக நான் உம்மைப் போற்றுகிறேன். உம்முடைய குமாரனின் தொழுவத்திற்காக நான் உம்மை போற்றுகிறேன். உமது மகிமைக்கும், விலையேறப்பெற்ற குமாரனகிய இயேசுவுக்கும், அவருடைய நாமத்தின் மூலமாய் இந்தப் ஸ்தோத்திரத்தை செலுத்துகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து