இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம் இருதயத்தின் ரகசியங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்வது மிகவும் கடினம். நாம்,நமது இரகசிய தோல்விகள், சலிப்புகள் மற்றும் அந்தரங்க பாவங்களை மறைத்து வைக்க விரும்புகிறோம். மற்றவர்கள் நம்மை நிராகரித்துவிடுவார்கள் என்றும், நம் இருதயத்தில் உள்ள ரகசிய அழுக்கை யாரேனும் அறிந்தால் நாமே வெட்கப்படுவோம் என்றும் அஞ்சுகிறோம். ஆனால் அந்தரங்க பாவம் நம்மிடம் மட்டும் மறைந்துள்ளது. அது நம் பிதாவுக்கு மறைவாக இல்லை. மறைந்திருக்கும் பாவம் நம் இருதயங்களை சீர்குலைத்து, நமக்கு மன்னிப்பை கொடுத்து ,அதிலிருந்து வெற்றிபெற நமக்கு அதிகாரம் அளிக்கும் தேவனுக்கும் இடையே பிளவை ஏற்படுத்துகிறது. அவர் நமக்கு அடைக்கலமாக இருக்க வேண்டும் என்று ஏங்குகிறார் என்பதை அறிந்து நம் இருதயங்களை அவரிடம் ஊற்றினால் போதுமானது .

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே பரிசுத்தமுள்ள தேவனே, இன்று நான் என் இருதயத்தில் உள்ள பல விஷயங்களை உம்மிடம் அறிக்கையிட விரும்புகிறேன். தகப்பனே, என்னிடம் இருப்பதை மற்றவர்கள் அறிந்து கொள்வார்களோ என்று நான் பயப்படுகிறேன்...(உங்கள் மிக இரகசியமான மற்றும் மறைமுகமான பாவங்களை தேவனிடம் அறிக்கையிடுங்கள் ) பரிசுத்த தேவனே , நான் பாவம் செய்துவிட்டேன், அதற்காக உம்மிடம் மன்னிப்பு கேட்கிறேன்...(மற்றவர்கள் அறியாத பாவங்கள் அனைத்தையும் அறிக்கையிடுவது முக்கியம், ஆனால் அந்த சாத்தான் தேவன் மீதான உங்கள் விசுவாசத்தை குறைக்க பயன்படுத்துகிறான்) நித்திய ஆண்டவரே, நான் கவலைப்படுகிறேன்...(உம்மை கவலையடையச் செய்யும் விஷயங்களை அறிக்கையிட்டு , தேவனின் கைகளில் அவற்றை ஒப்புக்கொடுங்கள் ) நீர் மாத்திரமே என் அடைக்கலமும்,பெலனுமானவர் . உம்முடனான இந்த அறிக்கையை நான் நம்புகிறேன் மேலும் மீண்டும் மீண்டும் இதே கண்ணிகளில் அகப்படாமல் இருக்க உமது பரிசுத்த ஆவியின் வல்லமையால் என்னை பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து