இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இரட்சிப்பு ! பரிசுத்த வேதாகமத்தின் ஒரு சிறந்த கருப்பொருள் என்னவென்றால், தேவனானவர் இரட்சிப்பின் தேவனாயிருக்கிறார், அவர் வாக்குதத்தத்ததை நிறைவேற்றுபவர், அவருடைய கிருபையையும், இரக்கத்தையும், நீதியையும் உண்மையாகப் பகிர்ந்து கொள்ளுகிறார். இந்த வாக்குதத்தம் உங்களை நீதியுள்ள வாழ்க்கைக்குத் தூண்டட்டும், பின்னர் உங்கள் எல்லா பிரச்சனைகளிலும் தேவனை நோக்கி கூப்பிடுங்கள் . இதைச் செய்வதற்கான ஒரு சிறந்த வழி, சங்கீதங்களை தவறாமல் வாசிப்பது, நீண்ட காலத்திற்கு முன்பு இந்த ஊக்கமளிக்கும் வார்த்தைகள் நீங்கள் தேவனை அழைக்கக்கூடிய ஜெபமாய் இருக்கக்கடவது . நீங்கள் சங்கீதங்களைப் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும், எப்படியாயினும், வாழ்க்கையில் வரும் காயங்களினாலும், கேள்விகளினாலும், துதிகளினாலும் தேவனை நோக்கி கூப்பிடுங்கள். அவருடைய சமூகம் உங்களுக்கு உண்மையாயும், உங்கள் இருதயம் எப்பொழுதும் அவருக்கு ஆயத்தமாயும் இருக்கக்கடவது.

என்னுடைய ஜெபம்

பிதாவே இவ்வுலகத்திற்கு உம்முடைய இரட்சிப்பு தேவைப்படுகிறது. உம்முடைய பராக்கிரமத்தினாலும், வல்லமையினாலும், தயவுகூர்ந்து அக்கிரமக்காரரின் திட்டங்களை அழிப்பீராக. துன்பங்களினாலும், துயரத்தினாலும் உள்ள ஜனங்களை உம்முடைய கிருபையினாலும், இரக்கத்தினாலும் மீட்டெடுக்குமாறு தயவாய் கேட்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து