இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீதிமானுக்கு துன்பங்கள் நேரிடும் என்று நாம் அறிவோம், தேவன் அவைகளிலிருந்து எப்படி விடுதலை அளிப்பார் என்று நாம் புரிந்துகொள்வோம் ? நம்முடைய இவ்வுலக வாழ்க்கையில் குறிப்பாக சமீப காலங்களில் விசுவாசிகளுக்கு வருகிறதான நிந்தைகளிலும், போராட்டங்களிலும் இவையெல்லாவற்றிலும் அவர்களுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார் என்று எப்படி அறிந்து கொள்ளுவோம். பவுலானவர் இதற்கான பதிலை கிரியையினால் காண்பிக்கிறார் : அவருக்கு என்ன நேர்ந்தாலும் அது அவரது விடுதலைக்காக மாறும் - அவரது மரணத்தின் மூலமாக தேவனோடு வாழ்வதாக இருந்தாலும் அல்லது சிறையில் இருந்து விடுதலைபெற்று ஊழியத்தைத் தொடர்ந்து செய்வதின் மூலமாக இருப்பினும் ( பிலிப்பியர் 1 : 19-23). எங்களுடைய இரட்சிப்பு பாதுகாப்பானது. நாம் கிறிஸ்துவுக்குள்ளாய் ஜெயவீரர்கள். சாத்தானால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது, தேவனின் அன்பைவிட்டு நம்மை பிரிக்கமாட்டாது, மரணமானாலும் கூட நம்மை பிரிக்க மாட்டாது ( ரோமர் 8 : 32 -39).

என்னுடைய ஜெபம்

பிதாவே, அடியேனுடைய வாழ்க்கையிலே என்ன நேர்ந்தாலும் உம்முடைய அன்பையும், இரட்சிப்பையும் பிரிக்கமாட்டாது என்று நம்பிக்கையிலே உறுதியாய் இருக்கும்படி எனக்கு விசுவாசத்தை தாரும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து