இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் ஆறுதல் படுத்தப்படுகிறோம் , ஏனெனில் நம்முடைய இதயம் நொறுங்குண்டிருக்கிறது. நாம் ஆறுதல் படுத்தப்படுகிறோம், ஏனெனில் நமக்கு ஆசீர்வாதம் தேவை. தேவன் நம்மை நேசிப்பதால், நாம் ஆறுதல்படுத்தப்படுகிறோம். மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்ல நாம் ஆறுதல் படுத்தப்படுகிறோம்.மேலே உள்ள அறிக்கைகள் ஒவ்வொன்றும் உண்மை என்றாலும், கடைசியானது மிக முக்கியமான ஒன்று. ஆறுதலை பற்றி அநேககாரியங்கள் உண்டு, அவற்றை வேறொருவருடன் பகிர்ந்து கொள்ளும் வரை முழுமையாக உணர முடியாது. இது துக்கம், ஏமாற்றம், காயம் மற்றும் இழப்பு ஆகியவற்றின் குணப்படுத்தும் வழிகளில் இறுதி படியாகும்.நாம் பெற்ற ஆறுதலைப் பகிர்ந்துகொள்ளும் வரை, அதை இன்னொருவருக்கு கொண்டு செல்லும் வரை, நம் ஆறுதல் பலவீனமாகவும் உறுதியற்றதாகவும் குறுகியதாகவும் இருக்கும். ஆறுதல் - பகிர்ந்து கொள்ளுங்கள் !

என்னுடைய ஜெபம்

கர்த்தாவே, பரலோகத்துக்கும், பூமிக்கும் ஆண்டவரே, பிரபஞ்சத்தை சிருஷ்டித்தவரே, என் இதயத்தை அறிந்து, என் கவலைகளை கவனித்து, நான் காயமடைந்தபோது என்னை ஆறுதல்படுத்தியதற்கு நன்றி. உம் கிருபை, இரக்கம் மற்றும் ஆறுதலை இன்று வேறொருவருடன் பகிர்ந்து கொள்ள எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன் ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து