இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"நான் இனி அவர்களை நேசிக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை ! எனக்கு அருளப்படும் அன்பு நின்றுவிட்டது , நான் அன்புகூரும் அளவில் முற்றிலுமாய் சோர்வடைந்து விட்டேன் ". சரியே, மற்றவர்களின் தேவை மிக பெரியதாக இருக்கும் பட்சத்தில் அல்லது பதிலுக்கு அன்புகூற அவர்கள் விரும்பாத பட்சத்தில், அவர்கள் நம்முடைய அன்பினை முற்றிலுமாய் சோர்வடையச் செய்து விடுவார்கள் என்று தோன்றுகிற நேரங்கள் உள்ளன . நாம் எப்படி வாழ்வது ? நமக்கு அன்புகூரும் ஒரு சமூகம் தேவை ; மற்ற விசுவாசிகள் நம்மை தாங்கி நேசிக்கிறார்கள். நாம் மற்றவர்களை இன்னும் அதிகமாய் அன்புகூர, கிறிஸ்துவுக்குள்ளான சகோதர, சகோதரிகள் தேவனை நோக்கி நமக்காக ஜெபிப்பார்கள். தேவன் நம்முடைய எல்லா விண்ணப்பத்திற்கும் பதிலளிப்பார் என்று நம்பிக்கையாய் இருப்போமானால் , தேவன் தம்முடைய பொங்கிவழிந்தோடும் கிருபையினாலும், பரிசுத்த ஆவியானவராலும் நம்முடைய இருதயத்திலே அன்பை பொழிந்தருளுவார் (பார்க்க ரோமர் 5:5). அன்பு குறைந்து காணப்படும்போது, பின்வாங்கவோ அல்லது விட்டுவிடவோ கூடாது, மாறாக தேவனிடம் கிட்டிச் சேருங்கள் , உங்கள் கடினமான நேரங்களில் உதவி செய்ய அவருடைய கிருபையை வேண்டி அவருடைய மக்களை அணுகுங்கள் (எபிரேயர் . 4:16).

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே, உம்முடைய கிருபையினால் உமது அன்பை என் இருதயத்திலேயும், என் சரீர குடும்பத்திலும், ஆவிக்குரிய குடும்பங்களிலும் பொழியுமாறு கேட்கிறேன். எங்களை சுற்றியுள்ளவர்களை அதிகமாக நேசிக்க எங்களுக்கு உம்முடைய உதவி தேவை. இயேசுவின் நாமத்தினாலே தாழ்மையுடன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து