இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் கிறிஸ்தவர்களாக ஆனபோது, ​​இயேசு நமக்கு பரிசுத்த ஆவியின் வரத்தை கொடுத்தார் (அப். 2:38; தீத்து 3: 3-7).உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறது.. (1 கொரிந்தியர் 6:19) மற்றும் பல வழிகளில் நம்மை ஆசீர்வதிக்கிறது (ரோமர்8). ஆவியின் பிரசன்னம் நம்மோடு இருப்பதால் தான் பிரச்சனைகள் , விமர்சனம் மற்றும் பரியாசம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் போது கூட நம்மால் தைரியமான மனிதர்களாக இருக்க முடிகிறது . ஆவியினால் உண்டாகும் கனிகளும் (கலா. 5: 22-23), ஆவியானவர் நம் இதயத்தில் ஊற்றும் அன்பும் (ரோ. 5: 5) நம்மை பலவீனப்படுத்தாது. ஆவியின் பிரசன்னம் பாவத்தை மேற்கொள்ள மற்றும் தெளிந்த புத்தியுள்ள வாழ்க்கை வாழ உதவும் ஒரு வல்லமையான பெலனாகும்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, ஆவியின் பிரசன்னம் எப்பொழுதும் என் வாழ்வில் இருப்பதற்காக நன்றி. என் வாழ்க்கையில் தினசரி சவால்களை நான் எதிர்கொள்ளும்போதும், இன்னும் அதிக தைரியம் மற்றும் வலிமையுடன் இருக்க தயவுசெய்து எனக்கு பலம் கொடுங்கள். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து