இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் நம்மை தம்முடைய பரிசுத்த பிள்ளைகளாய் இருக்கும்படி விரும்புகிறார். இந்த உலகம் உண்டாவதற்கு முன்னமே இது தேவனுடைய திட்டமாய் இருந்தது. நாம் சுவிகார புத்திரராய் அவருடைய குடும்பத்தில் இணைக்க பெற தேவன் ஒரு மிகப் பெரிய விலையை கொடுத்திருக்கிறார் . மேன்மையான பலியாக வந்த அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து . இவைகளை செய்வதினால் தேவனின் நோக்கம் என்ன ? நம்மை அன்புகூருவதே அவரின் நோக்கமும், மகிழ்ச்சியுமாய் இருக்கிறது.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் அன்பும் நிறைந்த தேவனே, என்னுடைய வாயின் வார்த்தைகள் உம்முடைய அன்பையும், கிருபையையும் விவரிக்க போதாது. நான் உம்முடைய சுவிகாரபுத்திரரில் ஒருவனாய் இருப்பதற்காக பெருமைகொள்கிறேன், அடியேன் வாழ்கிற வாழ்க்கை முறையினால் உமக்கு மகிழ்ச்சியை கொண்டுவர விரும்புகிறேன். உமக்கு சஞ்சலம் உண்டாக்கின நேரங்களுக்காகவும் , நீர் என்னிடம் எதிர்பார்த்தபடி வாழாத வேலைகளுக்காகவும் என்னை மன்னித்தருளும். உமது கிருபைக்காக என் வாழ்கை பரிசுத்தமான நன்றி செலுத்துதலாக இருக்க வேண்டுகிறேன்.இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து