இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் தேவனுடைய பரிசுத்த பிள்ளைகளாக இருந்தாலுங் கூட, நாம் உலகத்திலே எந்த காலத்தில் இருக்கிறோம் என்பதை குறித்து ஜாக்கிரதையாய் இருப்பது மிகவும் அவசியம். பொல்லாங்கன் இன்னும் பலருடைய இதயங்களைத் தன் வசத்தில் வைத்திருக்கிறான். மற்றவர்களுடைய வாழ்க்கையை அவருடைய கிருபையால் தொடவும், சோதனையை எதிர்க்கவும், தீயவரின் எதிர்ப்பை வெல்லவும் நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேவன் "காலத்தை மீட்க" விரும்புகிறார்

என்னுடைய ஜெபம்

கர்த்தாவே, என் நேரத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்துவதற்கான சிறந்த வழியைக் கண்டறிய எனக்கு ஞானத்தைத் தந்தருளும் . பொல்லாங்கன் என் பாதையில் வைக்கும் சோதனைகளைக் காண என் கண்களைத் திறந்தருளும். உமக்காக தைரியமாக நிற்க எனக்கு பெலனையும் , மற்றவர்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களை ஆசீர்வதிப்பதற்கான சிறந்த வழியை அறிய ஞானத்தை தாரும் .இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து