இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் அடைய விரும்பும் இவ்வுலக பொருள்கள் யாவும் அழிந்துப்போகக்கூடியவை . அவற்றின் பயன் ஒரு சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும், அல்லது அதிகபட்சமாக சில குறுகிய ஆண்டுகள் மாத்திரமே நிலைத்துநிற்கும் . நம் வாழ்க்கையும், நாம் நேசிக்கிறவர்களின் வாழ்க்கையும் கூட குறுகியது. தேவனுடைய மேலான குணாதிசயத்தை குறிப்பது அவருடைய பரிசுத்தம்,* என்றென்றும் - "நிலைத்து இருக்கிறது." எனவே நாம் நம் வாழ்க்கையை கட்டியெழுப்பும்போது, அது தேவனின் சித்தம் மற்றும் அவரை மகிமைப்படுத்தும்படியாய் நம் வாழ்க்கையை அவருடைய பரிசுத்தத்திலே பங்கடையத்தக்கதாக ஒப்புவித்து வாழ்வது, போன்ற ​​​​ ஒரு பாதுகாப்பான அஸ்திவாரத்தின் மீது கட்டுவோம். * ஏசாயாவின் தரிசனத்தில் இருந்த சேராபீன்கள் சத்தமிட்டதுப்போல , ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். (ஏசாயா6:1-4)

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே, உமது கிருபையால் என்னை பரிசுத்தமாக்கி, என் பாவத்தை மன்னித்ததற்காக நன்றி (ரோமர் 5:6-11; கொலோசெயர் 1:22-23). தயவு செய்து உமது பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பி, ஆவியின் கனியை என் வாழ்வில் காண்பிக்கச் செய்யும் , அதனால் நான் உமது கிருபையையும் பரிசுத்த குணத்தையும் பிரதிபலிப்பேன் . நான் உம் சத்தியத்தை தேடி, அதை என் வாழ்வில் பயன்படுத்தும்போது, ​​உமது சித்தத்தை அறிந்துகொள்ள எனக்குத் தாகத்தை தாரும் . உம்முடைய பரிசுத்ததை என் குறிக்கோளாகக் கொண்டு, உம்மை என் மையமாக வைத்து என் வாழ்க்கையை உருவாக்க விரும்புகிறேன். இயேசுவின் அருமையான நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து