இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் எதிர்கொள்ளும் போராட்டம் சரீரம் சார்ந்ததல்ல. மாறாக, இது நம்மால் எளிதில் பார்க்க முடியாத மற்றும் மிகவும் பலம்வாய்ந்த அதிகாரங்களுடனான ஒரு ஆவிக்குரிய போராட்டம். இதை ஒரு கற்பனைப் போராட்டம் என்றோ, பொருத்தமற்ற போராட்டம் என்றோ நாம் ஒதுக்கிவிடக் கூடாது. நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார். (ஆதியாகமம் 4:7) சாத்தான் காயீனைப் பற்றிக்கொள்ள எப்படி பதுங்கி வகைதேடினானோ அப்படியே அவன் இப்பொழுதும் நம் வாசலில் பதுங்கி காத்துநிற்கிறான். அவனுடைய எல்லா தீமையான காரியங்களை பிரயோகித்து நம்மை மேற்கொள்ளும்படியும், அழிக்கும்படியும், கறைபடுத்தும்படியும் வகைதேடுகிறான்.இந்த போராட்டத்தை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ளவும், பொல்லாத ஆவிகளின் சேனைகளையும் அடையாளம் கண்டுக் கொள்ளவும் வேண்டும்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, பொல்லாத ஆவிகளின் அச்சுறுத்தலை அநேக நேரங்களில் தீவிரமாக எடுத்துக்கொள்ளாததற்கு அடியேனை மன்னித்தருளும். உம்முடைய சித்தத்திற்கும், உம் கிரியைக்கும் எதிராகவும் , அசுத்தத்தோடே இணைக்கப்பட்டுல்ல எந்த காரியத்தையும் வெறுக்கதக்க பரிசுத்த சிந்தையை தாரும். அடியேன் சோதனையினால் வஞ்சிக்கபடாதபடிக்கும் , எவ்வகையில் உண்டாகும் தீமையினின்றும் இரட்சித்தருளும். இயேசுவின் மகா மேன்மையுள்ள நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து