இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சாத்தானுக்கு எதிராக போர்ச் செய்யும்போது, நாம் தேவனுடைய ஆவிக்குரிய போராயுதங்களை உபயோகிப்பதினால் இவைகள் சத்தியத்தையும், அந்த சத்தியத்தினால் உண்டாகும் விடுதலையையும் அறிந்துகொள்ளும்படி உதவுகிறது. பிசாசின் மிக பெரிதான இரண்டு ஆயுதங்கள் வஞ்சனை , மரணம் ஆகும். தேவனுடைய கிருபையானது நம்மை வஞ்சனையை பார்க்கவும், அதின் பொய்யான பிடியில் இருக்கிறதான சகோதர, சகோதரிகளின் மனதை தகர்க்கவும் செய்கிறது. தேவனின் வல்லமையானது மரணத்தின் தடையை தகர்த்து இயேசு கிறிஸ்துவுக்குள் நமக்கு ஜெயத்தை கொடுத்தது. இந்த ஜெய ஜீவியத்தில் நமது பணி? நாம் தேவனுக்கு கீழ்படிந்து, மற்றவர்களையும் அவ்வாறே செய்யும்படி உதவிசெய்து, நம்மை வீழ்த்தும் காரியங்களை எதிர்கொள்ளும்போது அவைகளை மேற்கொள்ள உதவும் அவருடைய போதுமான கிருபையையும் , வல்லமையையும் கண்டுபிடிப்போம்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, பிசாசின் சக்தியையும், நான் நேசிக்கும் வாழ்க்கையில் அவனுடைய செல்வாக்கையும் தோற்கடிக்க என்னைப் பயன்படுத்தியருளும். இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து