இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆம், நம்முடைய அரசாங்கத்தில் நமக்குப் பிடிக்காத அநேக காரியங்கள் உள்ளன. ஆனாலும் தேவன் மெய்யாகவே நம்மில் பெரும்பாலானோரை ஆசீர்வதித்திருக்கிறார், அதனால் தான் நாம் வசிக்கும் இடத்திலுள்ள அதிகாரிகளிடமிருந்து பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடிகிறது . ஆகிலும் இதுவரை கிறிஸ்தவ காலகட்டத்தில் அறியப்படாத மிகப் பெரிய கொடுமை நிறைந்த காலத்திலும் நாம் இப்பொழுது வாழ்கிறோம். எனவே நாம் நமது தலைவர்களுக்காக ஜெபிக்கும்போதும், நமது சுதந்திரங்களுக்காக தேவனுக்கு நன்றி கூறும்போதும், உலகம் முழுவதிலுமுள்ள சபைக்கு உண்டாகும் துன்புறுத்தலை நாம் மறந்துவிடக் கூடாது, அதற்காகவும் நாம் ஜெபிக்கவேண்டும் .

என்னுடைய ஜெபம்

ஓ மகத்தான மீட்பரே, யாத்திராகமத்தின் தேவனே , கடந்த காலத்தில் நீர்,உம் வல்லமையையும் மீட்பின் விடுதலையை காண்பித்தது போல , இன்று நீர் அதேபோல செயல்பட்டு, உம் நிமித்தம் துன்புறுத்தப்படும் ஒவ்வொரு விசுவாசியையும் ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த நாளில் அவர்களை அன்பினாலும் , சொஸ்தத்தினாலும் மற்றும் பாதுகாப்பினாலும் ஆசீர்வதிக்கவும்.இவைகளை இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே நாங்கள் அதைக் கேட்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து