இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் ஒரு புதிய மாதத்திற்குள் பிரவேசிக்கும் போது, ​​உன் தேவனாகிய கர்த்தருக்கு நன்றி தெரிவிப்பதோடு, நமக்கு கிடைத்த ஆசீர்வாதங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மோசே நமக்கு நினைப்பூட்டுகிறார். காரியங்கள் நன்மைக்கேதுவாக நடக்கும் போது நாம் நன்றி சொல்ல மிக எளிதில் மறந்து விடுகிறோம். இதுவே நாம் பிரச்சனையில் சிக்கி தவிக்கும்போது புலம்புவதும், தேவனிடம் உதவி கேட்பதும் எளிது, ஆனால் நமக்கு நன்மையான விஷயங்கள் நடப்பதற்கு நாம் "தகுதியானவர்கள்" என்று அநேகவேளையில் உணர்கிறோம். நம்மிடம் உள்ள காரியங்கள் அவருடைய கிருபையையும் உண்மைத்தன்மையையும் உறுதிப்படுத்துகிறது, எதற்காக என்றால் அவருடைய சித்தத்தை செய்யும்படியாய் என்று தேவன் நமக்கு நினைப்பூட்டுகிறார். நம் ஆசீர்வாதங்கள் அவருடைய கரங்களிலிருந்து வருகிறது என்பதை ஒருவருக்கொருவர் நியாபகப்படுத்திக் கொள்வோம் , மற்றவர்களை காட்டிலும் நாம் அவைகளுக்கு தகுதியானவர்கள் என்பதால் அல்ல. மேலும் , தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார், அதனால் அவருடைய ஆசீர்வாதங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் (2 கொரிந்தியர் 9:10-11). தேவனின் ஆசீர்வாதங்கள் மற்றும் கிருபையின் எடுத்துசெல்லும் ஒரு கருவியாய் இருக்கும்படி நாம் அழைக்கப்படுகிறோம்.

என்னுடைய ஜெபம்

உதாரத்துவமுள்ள பிதாவே , எனது மறதிக்கும் அவ்வப்போது பிசினித்தனமாய் இருந்ததற்காக என்னை மன்னித்தருளும் . நீர் அடியேனுடைய வாழ்க்கையில் பொழிந்த எல்லா நன்மையான காரியங்களுக்கும் நான் தகுதியற்றவன் என்று என் இருதயத்தின் ஆழத்திலிருந்து ஒப்புக்கொள்கிறேன் , . இருப்பினும், சில சமயங்களில், நான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிப்பதினால் அவைகளுக்கு தகுதியானவன் என்று நினைத்துக்கொள்கிறேன். இயேசுவின் இருதயத்தைப் போன்ற ஒரு இருதயத்தை என்னுள் உருவாக்க உமது பரிசுத்த ஆவியைப் கொண்டு உதவுங்கள் . எங்கள் ஆண்டவர் எல்லா நன்மைகளுக்கும் தகுதியானவர், ஆயினும் பூமிக்கு வந்து எல்லாவற்றையும் எனக்குக் கொடுத்தார் - உம் இரட்சிப்பின் மாபெரிதான ஈவு ! இந்த கிருபையின் ஈவுக்கும் , அடியேன் அநேக காரியங்களுக்கும் தகுதியில்லாத போதும் அவைகளை நீர் எனக்கு வழங்கிய நமைக்காக மிக்க நன்றி. இயேசுவின் நாமத்தின் மூலமாய் , நான் உமக்கு நன்றிகளையும், துதி, ஸ்தோத்திரங்களையும் செலுத்துகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து