இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

முதல் நூற்றாண்டில் அந்தியோகியா ஒரு பெரிய சபையாக இருந்தது. தேவனானவர் இந்த சபையயிலுள்ள யூதர்களையும் மற்றும் புறஜாதி சீஷர்களையும் ஆசீர்வதித்தார் அவர்கள் மிகவும் திறமைசாலிகளாய் இருந்தனர் . இந்த சீஷர்களே புதிய ஏற்பாட்டில் இயேசுவை முதல் முதல் பின்பற்றினவர்கள் , அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்த புதிய கிறிஸ்தவர்களில் அநேகர் தங்கள் சமூகத்திலும் அவர்களைச் சுற்றியுள்ள பகுதியில் வாழும் மற்றவர்களுக்கு போதித்து சுவிசேஷத்தை பிரசங்கித்தனர் . "கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள்" இந்த "அநேகர்" ஆதிக்கால திருச்சபையின் வல்லமை அதன் நன்கு அறியப்பட்ட தலைவர்களை மாத்திரம் சார்ந்து இல்லை என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறார்கள். அந்தியோகியாவில் உள்ள சபையின் வாழ்க்கை அதன் உறுப்பினர்களின் தியாகம் மற்றும் தேவன் அவர்களுக்குக் கொடுத்த ஈவுகளை மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய பயன்படுத்தினார்கள் .

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையும் , அதிகாரமுமுள்ள தேவனே , உமது குமாரன் மூலமாய் நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள கிருபையை மற்றவர்கள் புரிந்துக்கொள்ளும்படி , ஊழியம் செய்யவும், ஜெபிக்கவும், சுவிசேஷத்தை பிரசங்கிக்கவும் , போதிக்கவும் அர்ப்பணிப்புள்ள மக்கள் கொண்ட படையை உருவாக்கும்படி உதவிச் செய்யும் . ஆதிக்கால திருச்சபையில் இருந்ததைப் போலவே, ஒவ்வொரு நாளும் புதிய பெலனை இன்று வாழும் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் தந்து புதுப்பித்தருளும் ! என் இரட்சகரும், மீட்பரும், ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் மகத்தான நாமத்தினாலே இதைக் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து