இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்களைப் குறித்து எனக்குத் தெரியாது, ஆனால் நான் சோதனைகளைச் சந்திக்க வேண்டுமென்ற அவசியத்தை போற்றுவது எனக்கு மிகவும் கடினம். வாழ்க்கையில் வரும் சோதனைகளை சகித்துக்கொள்வதும், தாங்குவதும் கடினம்! நாம் பிரச்சனைகளின் மத்தியில் இருக்கும்போது, ​​எந்த முடிவையும் காணாதபோது இது குறிப்பாக உண்மையாய் இருக்கிறது . ஆனால் இயேசுவை விசுவாசிக்கிறவர்களாக, சோதனை காலங்களில் நிலைத்திருப்பதற்கு நமக்கு முக்கியமான ஆவிக்குரிய காரணங்கள் உள்ளன. காரியங்கள் கடினமாக இருக்கும் போது நமது நம்பிக்கை மற்றும் ஆவிக்குரிய ஆர்வத்தை பற்றிக் கொள்வதற்கான சிறந்த காரணங்களில் ஒன்று, நம்மிடமிருந்து ஒருவரும் பறிக்க முடியாத வாழ்க்கையின் ஜீவகிரீடத்தைப் நமக்குத் தருவதாக தேவன் கொடுத்த வாக்குத்தத்தமாகும் . நான் சோதனையை சகித்து ஜீவகிரீடத்தைப் பெற விரும்புகிறேன், இல்லையா? எனவே, சோதனையைச் சகிப்போம் !

Thoughts on Today's Verse...

I don't know about you, but it is hard for me to appreciate our need to go through trials. Trials in life are hard to tolerate and endure! This is especially true when we are in the middle of them and see no end in sight. But as believers in Jesus, we have vital spiritual reasons to persevere under trials. One of the best reasons to hang onto our faith and spiritual passion when things are tough is God's promise to give us the crown of life that can't be taken away from us. I want to stand the test and receive the crown, don't you? So, let's persevere under trials!

என்னுடைய ஜெபம்

கிருபையுள்ள தேவனே , வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்களுக்கு ஜீவகிரீடத்தை எனக்கு வாக்களித்ததற்காக உமக்கு நன்றி. என்னை ஊக்கப்படுத்தவும், பெலப்படுத்தவும், ஆறுதல்படுத்தவும் உமது பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையுடன் சோதனைகளை சகிக்க எனக்கு வல்லமையை தாரும் . இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Gracious God, thank you for promising me the victor's crown of life. Please empower me to persevere through trials with the strength of your Holy Spirit to encourage, strengthen, and comfort me. In Jesus' name, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of யாக்கோபு-James - 1:12

கருத்து