இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் கர்த்தருக்கு சொந்தமானவர்கள். அவர் கிரயத்தினால் நம்மை பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்தினின்று மீட்டெடுத்தார். நாமாகவே நம்முடைய ஜீவனை அவருடைய கரங்களில் ஒப்புவித்து உள்ளோம். நாம் எங்கு சென்றாலும், எதை நடப்பித்தாலும், அவர் கிருபை எப்பொழுதும் நம்முடன் செல்கிறது. அவர் நம்மை கைவிடமாட்டேன் என்று வாக்களித்திருக்கிறார். எந்த காரியங்கள் ஆனாலும் அவருடைய அன்பை விட்டு நம்மை பிரிக்கமாட்டாது என்று உறுதி அளித்துள்ளார், எனவே தேவன் நம்மை எங்கே வழிநடத்தி செல்வார் என்ற ஒரு உற்சாக எதிர்பார்ப்பு உணர்வுடன் நம்முடைய ஜீவியத்தை ஜீவிப்போம். நாம் மரணம் , துன்பம் , வியாகுலம் ஆகிய கடினமான நேரங்களை சந்திக்கும் போது கூட , நாம் தனியாக எதிர்கொள்ள மாட்டோம் என்ற உறுதியுடன் எதிர்கொள்வோம்.மரண இருளின் நிழலில் கூட, சாத்தான் என்ன செய்வான் என்று சொல்லி நாம் பயப்பட வேண்டியதில்லை.

என்னுடைய ஜெபம்

பிதாவே என்னை மீட்க உம்முடைய நேச குமாரணை அனுப்பியதற்காக உமக்கு நன்றி. ஆண்டவராகிய இயேசுவே நீர் இந்த உலகத்திற்கு வந்து என்னுடைய பாவங்களுக்கான விலையை கொடுத்து , பரிசுத்த ஆவியானவர் என்னில் உம்முடைய பிரசன்னமாக இருக்க அனுப்பியதற்காக நன்றி. என்னுடைய ஜீவனை எடுத்து உம்முடைய மகிமைக்காக உபயோகித்தருளும். வாழ்க்கையின் மிக கடினமான சவால்களை எதிர்கொள்ள எனது விசுவாசம் தளர்ந்து போகாமல் இருக்க செய்தருளும் . நான் மரித்தாலும், பிழைத்தாலும் எண்ணில் நீர் மகிமைப்பட அடியேன் ஜெபிக்கிறேன். இயேசுவின் திரு நாமத்தினால் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து