இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பாவத்தைப் போல எதுவும் அதிகமாய் நம்மை கறைப்படுத்தாது . இது நம் இருதயத்தில் ஒரு கறையை உண்டுபண்ணுவது மட்டுமல்லாமல் , நம் மனதில் ஒரு தாக்கத்தையும் விட்டுச்செல்கிறது. ஆனால் அவர் நம் பாவங்களை மட்டும் மன்னிக்காமல், நம் பாவங்களை மட்டும் மறக்காமல், அவற்றை முற்றிலுமாய் போக்க தேவனின் கிருபையானது வெளிப்படுத்தப்படுகிறது. அவைகள் போய்விட்டன . கறை நீக்கப்படுகிறது, குற்றமுள்ள மனசாட்சி அகற்றப்படுகிறது. அவருடைய கிருபையினால் நாங்கள் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.

என்னுடைய ஜெபம்

மகிமையுள்ள தேவனே , உம்முடைய கிருபை எனக்கு அளிக்கும் சந்தோஷம் எவ்வளவு பெரியது ! உமக்குள்ளாய், உம் கிருபையினால் என் வாழ்க்கை பாதையை முழுவதுமாய் மாற்றியமைத்ததினால், அந்த வாழ்க்கை ஒருபுறம் முடிவுற்றும், மறுபுறம் புதிதாயும் துவங்குகிறது அதினால் நான் ஒருபோதும் உமக்கு வாயின் வார்த்தையினால் நன்றி சொல்லவோ அல்லது துதித்தால் மாத்திரமோ போதாது என்று அறிவேன் . இயேசுவின் நாமத்தினாலே நான் இவைகளை ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து