இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் அன்பாகவே இருக்கிறார் . தேவனே அன்பின் ஊற்றாயிருக்கிறார் .பரிசுத்த ஆவியின் மூலமாய் அன்பை நம் இருதயங்களில் ஊற்றுகிறார் (ரோமர் 5:5). அப்படியானால், நமது சபைகளையும் , குடும்பங்களையும் , சிறு குழுக்களையும், சமூகங்களையும் எப்படி அன்பானவர்களாக மாற்றுவது? இவர்கள் எல்லோரும் அன்பில் பெருக தேவனை நோக்கி ஜெபிப்போம். நம்முடைய ஜெபத்தில் அவர்களுக்காக நாம் ஜெபிக்கிறோம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவோமாக .பின்னர் அவர்களுடனே தொடர்புகொண்டு நம் அன்பை வெளிப்படுத்துவோம்.

என்னுடைய ஜெபம்

பிதாவே , என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு அன்பிற்கு முன்மாதிரியாக இருந்து உதவ என்னைப் பயன்படுத்துங்கள். தயவு செய்து உம்முடைய அன்பை உம் ஆவியின் மூலமாய் என் இதயத்தில் ஊற்றுங்கள் , பின்னர் அந்த அன்பை என் வாழ்க்கையிலிருந்து மற்றவர்களுக்கு கொண்டுச் செல்ல வழியாய் இருக்க உதவுங்கள். நம் சபையிலுள்ளவர்களுடன் மட்டும் ஒருவருக்கொருவர் அதிக அன்பான மனப்பான்மையோடில்லாமல், நம் ராஜ்யமாகிய சபையின் குடும்பத்தில் இல்லாத நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமும் அன்பில் மேன்மேலும் பெருகவும், நிலைத்தோங்கவும் உதவுங்கள். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து