இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவின் மீது விசுவாசம் என்பது தேவனின் கிருபைக்கு முற்றிலும் முக்கியமான பிரதிபலிப்பாகும், மேலும் இது ஒரு வாழ்க்கையை மறுரூபமாக்கும் ஆசீர்வாதமாகும். சிறைக்காவலரைப் பொறுத்தவரை, விசுவாசம் என்பது கர்த்தராகிய இயேசுவின் நற்செய்தியைக் கேட்பது மற்றும் அந்த நற்செய்தியை விசுவாசித்து, உடனடியாக ஞானஸ்நானம் பெற்று, வாழ்க்கை மாற்றத்தை வெளிப்படுத்தி, மற்ற விசுவாசிகளுடன் ஐக்கியத்தில் பங்குகொள்வதன் மூலம் பதிலளிப்பது (அப்போஸ்தலர் 2:42-47). ஆண்களின் சிறைக்காவலராக இருந்து உங்களுடைய வீட்டிலே வந்து அவர்களின் காயங்களைக் கழுவுவதை கற்பனை செய்து பாருங்கள்! மனிதர்களை கடினமான காவலில் அடைப்பதற்கு பொறுப்பாளியாக இருப்பதைப் பற்றியும், சிறையில் கட்டுண்டவர்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அதே இரவில் ஞானஸ்நானம் கொடுப்பதை பற்றியும் சிந்தியுங்கள் ! பின்னர் உங்கள் மேஜையில் அமர்ந்து உணவைப் பகிர்ந்துகொள்ளும் மனிதர்களை சங்கிலியால் பூட்டுவதை கற்பனை செய்து பாருங்கள்! தேவன் உன்னதமானர்.அவரது கிருபை ஆராய்ந்து முடியாதது. இழந்தவர்கள் உண்மையாக விசுவாசிக்கும் போது நாம் மகிழ்ச்சியடைவதில் ஆச்சரியமில்லை! வாழ்க்கை என்பது என்றென்றும் வேறுபட்டது.

என்னுடைய ஜெபம்

பிதாவே , உமது கிருபையினால் நீர் எனக்குக் கொண்டு வந்த ஆச்சரியங்களுக்காக நன்றி. இந்த வாரம் இயேசுவின் நற்செய்தியை நான் நேசிப்பவர்களுக்கு கூறுவதின் மூலம் உம் கிருபையை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கையில் அடியேனை ஆசீர்வதியும் . கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து