இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எந்த வகையான காரியங்களை எவர்களிடமிருந்து என் மனதிற்குள் கொண்டுச் செல்ல வேண்டும் என்பதை நான் தேர்வு செய்கிறேன் ஆனால் இந்தச் சுதந்திரமும், சலுகையும் ஒரு பொறுப்பேயாகும் . தேவன் என்னை ஆசீர்வதிக்க ஏங்குகிறார், ஆகிலும் அவருடைய சித்தத்தை அறிந்து அதன்படி செய்வதில் என் இருதயம் மகிழ்ச்சியடையும் வரை அந்த ஆசீர்வாதம் செயலற்றதாகவே இருக்கும்.

என்னுடைய ஜெபம்

அதிசயமான சிருஷ்டிகரே , இவ்வளவு அழகான உலகத்தை உண்டாக்கி , என் தாயின் வயிற்றில் என்னை இணைத்தது போல, உமது சத்தியத்தை அறியும் ஆவலையும், அந்த சத்தியத்தின் படி எப்படி வாழ்வது என்ற நுண்ணறிவையும் என்னுள் உண்டாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த வாழ்க்கை பயணத்தில் எனக்கு உதவ உம்முடைய பரிசுத்த ஆவியானவர் என்னில் இருக்கிறார் என்பதை நான் அறிவேன், ஆனால் நீர் என்னை ஆசீர்வதித்த எல்லா வழிகளிலும் உம்மைப் பிரியப்படுத்தவும் உம்மால் ஆசீர்வதிக்கப் படவும் நான் மிகவும் விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து