இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இன்றே நம் இருதயங்களில் ஒருமனப்படுவோமாக ; பல்லாயிரக்கணக்கானவர்களாகிய நாம் ஒன்று சேர்ந்தோம்! (தினமும் கிட்டத்தட்ட 300,000-க்கும் அதிகமானோர் நமது இந்த ஆவிக்குரிய கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள், எனவே இந்தப் பெரிய குழுவானது மகிழ்ந்து களிகூர்வதை கற்பனை செய்து பாருங்கள்!) அவருடைய நீதியின் மகிமைக்காக வாழும் நம்மை மெய்யான மகிழ்ச்சியினாலும் , சந்தோஷத்தினாலும் நிரப்புவதற்கு தேவனை நோக்கி ஜெபிப்போம். நம்முடைய மகிழ்ச்சியானது நம் தேவனைப் போல அசைக்க முடியாததாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நமக்கு மகிழ்ச்சியை உண்டுபண்ணும் விசுவாசம் நம்மைச் சுற்றியுள்ள யாவரையும் பற்றிக்கொள்ளத்தக்கதாயும், விரும்பத்தக்கதாயும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நம்மிடையே கஷ்டத்தில் இருப்பவர்களுக்காக, அவர்கள் துன்பங்கள் இருந்தாலும் சந்தோஷப்படுவதற்கான காரணங்களை உண்டுப்பண்ணும்படி நம்முடைய வல்லமையுள்ள தேவனை நோக்கி ஜெபிப்போம் . அவர் ஏற்கனவே எண்ணுக்கடங்காத நன்மையினால் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் , நம் வாழ்வில் நிறைந்திருக்கும் மகிமையுள்ள ஐசுவரியங்களை பகிர்ந்துக்கொள்வதை காண அவர் நம் மண கண்களைத் திறக்கும்படி ஜெபம் செய்வோம் .

என்னுடைய ஜெபம்

அற்புதமான பிதாவே , சர்வவல்லமையுள்ள தேவனே,, உம் உதாரத்துவமான ஆசீர்வாதங்களுக்காக உமக்கு மிக்க நன்றி. ஆண்டவரே, தயவுசெய்து எங்களை மிகவும் மகிழ்ச்சியான மற்றும் சந்தோஷமான மக்களாக ஆக்குங்கள். கஷ்டத்தில் இருக்கும் என் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்காக, அவர்களின் நம்பிக்கை, விடாமுயற்சி, ஆசீர்வாதம், இரட்சிப்பு மற்றும் வெற்றிக்காக நான் ஊக்கமாய் ஜெபிக்கிறேன். எங்களில் நிறைவாக ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்காக, மேலும் போற்றக்கூடியதான மற்றும் நன்றியுள்ள இருதயங்களைப் பெற நான் ஜெபிக்கிறேன் . எங்களின் விண்ணப்பங்களை எப்போதும் கேட்டுக் கொண்டிருப்பதற்கு உமக்கு நன்றி. இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து