இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் நமக்கு ஆண்டவரும், ஆறுதல் செய்கிறவரும், வழி நடத்திச் செல்லுகிறவருமாய் இருக்கிறார். அவரது கிருபையுள்ள சமூகமும், இரக்கமுள்ள ஆசீர்வாதமும் மட்டுமே நமது தொய்ந்துபோன மற்றும் விடாய்த்த ஆத்துமாக்களுக்கு ஆறுதலையும், தேறுதலையும் கொண்டுவர முடியும். ஆகவே, நாம் அவரிடமாய் சாய்ந்து நம்முடைய எல்லா பாவங்களையும், உள்ளத்தின் விசாரங்களையும் அறிக்கையிடுவோம். நம்முடைய எல்லா உள்ளத்தின் விசாரங்களையும் நீக்கி, மறுபடியும் நம்முடைய ஆவலையும், சந்தோஷத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையையும் மீட்கும்படி கேட்போம்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்மையுள்ள மேய்ப்பரே, இரைச்சலும், அநேக கருத்துகளினால் குழப்பங்களும், அநேக கவலைகளினால் பாரங்களும் சூழ்ந்திருக்கும் வேளைகளில் உம்முடைய பரிசுத்த ஆவியானவரால் என்னை தேற்றியருளும். உம்முடைய ஆறுதலும், சமாதானமும் எனக்கு வேண்டும். உம்முடைய சமூகமும், கிருபையும் எனக்கு வேண்டுமென்று கேட்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே கேட்டுக்கொள்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து