இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய மகிமைக்காக நீங்கள் என்ன பெரிய "இராஜ்யத்தை குறித்த கனவுகள்" வைத்திருக்கிறீர்கள்? எப்படிப்பட்ட நம்பமுடியாத யோசனைகளை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியும்? தேவனுடன் பரலோகத்தைப் பற்றிய உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன?இப்போது நீங்கள் மனதை திறந்து , உங்கள் கற்பனைக்கு சவால் விடுத்து, உங்கள் எதிர்பார்ப்புகளை கூட்டுங்கள் , பரலோகத்தின் அற்புதத்தை அதின் எளிமையான சத்தியத்தை அறிய நீங்கள் தயாரா? தேவனால் அதை விட மிக அதிகமாக செய்ய முடியும். அவருடைய மகிமையான சித்தத்தைச் செய்வதற்கும் அவருடைய நித்திய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் அவருடைய வல்லமை நம்மில் கிரியை செய்கிறது.எனவே, நம் பார்வையை மிகக் குறுகியதாய் அமைக்காமல், மிகக் குறைவாக எதிர்நோக்காமல் .அவருடைய மகிமைக்காக வாழ்ந்து , நம் வாழ்க்கையில் அவருடைய கிரியை செயல்படுவதை எதிர்பார்க்கலாம்.

என்னுடைய ஜெபம்

கர்த்தாவே, வானத்திற்கும் பூமிக்கும் தேவனே,என் அப்பா பிதாவே, அன்பான மேய்ப்பரே ,பெரிய கனவுகளை கனவு காணவும், என் பூமிக்குரிய மற்றும் சுயநலமாக மூளை கற்பனை செய்வதை விட மிக உயர்ந்த நம்பிக்கைகளை கொண்டிருக்க தயவு செய்து உம் ஆவியின் மூலம் என் எண்ணங்களை சீர்ப்படுத்துங்கள்.உமது மகிமைக்காக நான் வாழும்போது எனக்கு ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் கொடுங்கள்.இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து