இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

துதி செலுத்துவதே தேவனுக்கு நன்றி செலுத்துவதை விட மேலானது, அது அவருடைய கிருபையான கிரியைகளைப் பற்றி மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதாகும், இதினால் அவர்களும் அவரை பிதாவாக , மீட்பராக மற்றும் ஜெய கர்த்தராக அறிந்துகொள்ள முடியும். நம்முடைய துதிசத்தத்தோட இன்னுமாய் தேவனின் அன்பினால் மீட்டெடுக்கப்பட்ட மற்றவர்களுடைய இருதயங்களிலிருந்து உண்டாகும் துதியோடே ஒன்றோடு ஒன்று இணைக்க முடியும்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , சர்வவல்லமையுள்ள ராஜாவே , இன்று கடினமான இடங்களில் உமக்கு ஊழியம் செய்யும் அனைவரையும் ஆசீர்வதிப்பீராக . சொந்த தேசத்திலிருந்து மற்ற தேசங்களுக்கு கடந்து வந்து சுவிஷேசத்தை அறிவிப்பவர்களும் உம்மை அப்பா பிதாவாக அறிய வேண்டிய மக்களுடன் இயேசுவின் கிருபையைப் பகிர்ந்துகொள்வதற்காக நான் குறிப்பாக நன்றி கூறுகிறேன். அவர்களின் வார்த்தைகளுக்கு வல்லமை தாரும் , அவர்களின் வாழ்க்கையையும் குடும்பத்தையும் பாதுகாத்து , மேலும் அவர்களின் முயற்சிகளுக்கு ஏற்ற கனிகளை தந்தருளும்.உண்மையான நன்றியுணர்வு என்பது உம்முடைய கிருபையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை உள்ளடக்கியது என்பதை புரிந்து கொள்ள எனக்கு ஞானத்தை தாரும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து