இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அனைத்து மெய்யான ஊழியமும் "மாம்சத்திலே வெளிப்பட வேண்டும் " - இது ஜனங்களுடன் தொடர்புடையது , மனுஷர்களை சந்திப்பது மற்றும் அவர்களுடைய உலக பிரகாரமான சரீர தேவைகளை மெய்யாய் சந்திப்பது போன்ற எல்லா காரியங்களையும் உள்ளடக்கியது. ஹார்ட்லைட் ஒரு இணைய ஊழியம் என்றாலும், அது ஒருபோதும் இணையதளத்தில் மட்டும் வாழாது. இயேசுவின் கிருபையை தங்களுடைய FRAN களுடன் (friends நண்பர்கள், relatives உறவினர்கள், Acquaintances தெரிந்தவர்கள், Neighbours அண்டை வீட்டார்) பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள விசுவாசிகளின் அன்றாட வாழ்வில் இது கொண்டு செல்லப்பட வேண்டும். தேவனானவர் திட்டமிட்டு இயேசு கிறிஸ்துவை ஏற்ற நேரத்தில் ஏற்ற இடத்திற்கு அனுப்பியது போல, அவர் நம்மோடும் அப்படி செய்தார். மற்றவர்களை ஆசீர்வதிக்கவே நாம் இங்கு இருக்கிறோம், "வார்த்தையினால் மட்டுமல்ல, கிரியையினாலும், சத்தியத்தினாலும் !"

என்னுடைய ஜெபம்

மகிமையுள்ள பிதாவே ,இன்று நான் இருக்கும் இடத்திற்கு என்னை கொண்டு வைத்ததற்காக நன்றி. உம்முடைய சித்தத்தை செய்வதற்கும், இயேசுவின் ஊழியத்தைத் தொடரவும் நான் இங்கு இருக்கிறேன் என்பது எனக்குத் நன்றாக தெரியும். இயேசுவின் நாமத்தினாலே மற்றவர்களை ஆசீர்வதிக்க நீர் இன்று எனக்கு அருளும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள எனக்கு உதவியருளும் . என் ஆண்டவராகிய இயேசுவின் மாபெரும் நாமத்தில் நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து