இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பரலோகத்தில் உள்ள நம்முடைய தேவன் அங்கிருந்து கீழே உற்று பார்த்து , குழப்பம் உண்டாக்குகிறதான குறைபாடுள்ள தம்முடைய பிள்ளைகளை கண்டிக்க காத்திருக்கிறதான கடினமுள்ளவர் அல்ல. மாறாக, நாம் எவ்வளவு நொறுங்கியிருக்கிறோம், உடைந்திருக்கிறோம், குழப்பமுற்றிருக்கிறோம் என்று பார்த்து, நம்மை அவைகளிலிருந்து மீட்கும்படியாய் இவ்வுலகத்திற்கு வந்தார். நம்முடைய ஜீவனாகவும், இரட்சகராகவும் இயேசுவானவரை அனுப்புவது தேவனுடைய நோக்கமாய் இருந்தது.

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் பிதாவே, என்னுடைய செயல்களில் சிக்கி, இருதயத்தை கறைபடுத்துகிறதான பாவங்களிலிருந்து என்னை இரட்சியும். பரிசுத்த ஆவியினால் என்னுடைய இருதயத்தை சுத்தப்படுத்தி புதிதான நல்ல ஆவியை எண்ணிலே நிலைவரப்படுத்தும். உம்முடைய மன்னிப்பிற்காகவும், கிருபைக்காகவும் உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து