இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தனிப்பட்ட விருப்பங்கள், சக மனுஷருடைய அழுத்தம் மற்றும் குறிப்பிட்ட நாட்களைக் கொண்டாடுவது, குறிப்பாக விடுமுறை நாட்களைப் பற்றிய கவலைகள் ஆகியவை நமது கிறிஸ்தவ உறவுகளை பிளவுபடுத்துவதை அடிக்கடி அனுமதிக்கிறோம். உள்ளத்தின் ஆழத்திலிருந்து , நாங்கள் எங்கள் கருத்தை அல்லது நிலைப்பாட்டை வேறு எவர் மீதும் திணிக்க முயற்சிக்க மாட்டோம். ஒருவர் தேவனுக்கு ஒரு விசேஷமான நாளைக் கொண்டாடாததால் ஒருவரை நியாயந்தீர்ப்பதோ , மேலும் மற்றொருவர் நாட்களைக் விசேஷமாக கொண்டாடுகிறார் என்பதற்காக நியாயந்தீர்ப்பதோ கூடாது . இது தேவனைப் பிரியப்படுத்தவும், அவர் தகுதியுள்ளவர் என்று நாம் கருதும் விதங்களில் அவரைக் கனப்படுத்தவும் விரும்புவதைச் சுற்றியுள்ள தனிப்பட்ட விஷயமாகும் . நாம் நம்பிக்கை இல்லாதவர்களாய் எல்லோரும் செய்வதையே நாமும் செய்ய வேண்டும் அல்லது நம் விருப்பத்தின்படி மற்றவர்களை செய்யும்படி கட்டாயப்படுத்த வேண்டாம். மாறாக , எல்லா விஷயங்களிலும் சரியான நோக்கத்தையே நினைவில் கொள்வோம்: கிறிஸ்துவுக்குள்ளாய் நம் சகோதர சகோதரிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு,நாம் எல்லாவற்றிலும் தேவனை கனப்படுத்துவோம்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , மனிதர்களுடைய வழக்கங்கள் மற்றும் அந்த வழக்கங்களைப் பற்றிய எங்கள் விருப்பத்தின் அடிப்படையில் உம் மக்களின் உறவை முறித்ததற்காக எங்களை மன்னியுங்கள்.என்னைப் பொறுத்தவரை, தகப்பனே, என் நம்பிக்கையின்படி கிறிஸ்துவை கனம் பண்ண எனக்கு தைரியம் கொடுங்கள், ஆனால் உமது மக்களை ஆசீர்வதிக்கும் வழிகளையும், அவர்களிடையே பிளவை உண்டுபண்ணாமல் இவைகளை செய்வதற்கான ஞானத்தையும் எனக்குக் கொடுங்கள். இந்த காரியங்களில் நான் ஒருபோதும் முழுமையாக வெற்றிபெறமாட்டேன் என்று எனக்குத் தெரியும், ஆனால் உம்முடைய உதவியால் , உமக்கான மகிமையைக் கொண்டு வரவும், உம் பிள்ளைகளுடன் எனது ஐக்கியத்தை பேணவும் வழிகளைக் கண்டுபிடிப்பேன் என்று முழுநிச்சயமாய் நம்புகிறேன் . இந்த விஷயத்தில் என் இதயத்தைத் பரிசுத்தப்படுத்தி, நான் செல்ல வேண்டிய பாதையிலே என்னை நடத்தும் . இயேசுவின் நாமத்திலே . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து