இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு இந்த உலகத்திற்கு வந்தபோது, ​​தாவீதின் சந்ததியிலே இஸ்ரவேலுக்கு வந்தார். இயேசு, ஈசாயின் மகனான தாவீது ராஜாவின் சரியான வம்சத்திலே வந்தார் . அவருடைய பிறப்பு யூத தீர்க்கதரிசிகளால் தீர்க்கதரிசனம் கூறப்பட்டது மற்றும் இஸ்ரவேல் மக்களின் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் யூதராக பிறந்திருந்தாலும் , ஆபிரகாம் மற்றும் யூத மேசியாவின் பிள்ளைகள் மூலம் தேவன் அனைத்து தேசங்களில் உள்ள மக்களையும் இரட்சித்து ஆசீர்வதிப்பார் என்ற பழைய ஏற்பாட்டின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் (ஆதியாகமம் 12:1-3), இயேசுவானவர் இவ்வுலகில் உள்ள அனைவரையும் இரட்சிக்க வந்தார் (யோவான் 3:16). தாவீது ஒரு பெலமுள்ள யுத்த வீரன் மற்றும் சங்கீதம் எழுதும் ராஜாவாய் இருந்து இஸ்ரவேலரை பெரும் வல்லமைக்கும் புகழுக்கும் வழிநடத்தினான் , ​​​​ஆனால் இயேசுவானவர் , மரணத்தை வென்று நமக்கு மெய்யான ஜீவனை கொண்டு வருவதன் மூலம் கோடானு கோடி கணக்கான யூதர்கள் மற்றும் யூதர்கள் அல்லாதவர்களின் இருதயங்களில் கிருபையின் இராஜ்யத்தை ஸ்தாபித்தார் . எல்லா மக்களும், இஸ்ரவேலர்கள் மற்றும் இஸ்ரவேலர்கள் அல்லாதவர்கள் மற்றும் யாவரும் இயேசுவுக்குள் தங்கள் நம்பிக்கையைக் காண்கிறார்கள்.

என்னுடைய ஜெபம்

பிதாவே , இந்த ஆண்டின் முடிவு நெருங்கி வருவதால், இன மற்றும் மத உணர்வுகள் உலகமெங்கும் அதிகமாக பெருகுகின்றன - இது ஒரு கொந்தளிப்பான நேரம்! இந்த நேரத்தில் எங்களுக்கு அமைதியை தந்தருளும் . உம் அன்பையும் மாறாத பிரசன்னத்தையும் எங்களுக்கு தந்தருளும் . உம் கிருபையை கொண்டு எங்களை வழி நடத்தும் . அதே நேரத்தில், இயேசுவின் இரட்சிப்பின் மூலம் எல்லா மக்களையும் சமாதானகட்டினால் கொண்டுவரும்படியான உம் சித்தத்தின்படியே எங்கள் இருதயங்களை மீண்டும் உற்சாகப்படுத்தும் . உம் நற்செய்தியை உலகமெங்கிலும் உள்ள மக்களுக்கு அன்புடன் பகிர்ந்து கொள்ளும் உம் பிள்ளைகளை ஆசீர்வதியும். இந்த ஊழியத்தை நிறைவேற்ற அவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள பெரும்பாலானவர்களை விட்டு விலகி இருப்பதால் அவர்களை ஆசீர்வதித்தருளும் . அவர்களின் இருதயத்தின் வாஞ்சையை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றி அவர்களை ஆசீர்வதியும் : இந்த விடுமுறைக் காலத்தில் அவர்கள் யாரையாவது இரட்சிப்புக்கு வழிநடத்தி செல்ல அவர்களை எடுத்துப் பயன்படுத்தும் . இயேசுவின்நல்ல நாமத்தின் மூலமாய் அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து