இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மேய்ப்பர்களுக்கு அடையாளம் முன்னணையிலே ஒரு குழந்தை கிடத்தியிருக்கக்காண்பது. அழகான வல்லமை வாய்ந்த அடையாளம் அல்லவா! செம்மறிகளும்,ஆடுகளும் தானியத்தையும் வைக்கோலையும் தின்னும் இடத்தில் இந்த உலகம் யாவற்றையும்உண்டாக்கின சர்வவல்லமையுள்ள தேவ குமாரன் தூங்குகிறார். அத்தகைய எளிமையான தொடக்கத்திற்குத் தன்னை தாழ்த்தி கொள்ளும் அளவுக்கு தேவன் நம்மை நேசிக்கிறார், தேவதூதர்கள் ஏன் அவரைப் துதிக்கிறார்கள் என்பதை இது நமக்கு நினைப்பூட்டுகிறது, அவர் மகிமை பெற்றவர், ஆனால் அந்த மகிமையை ஒளித்துவைக்கவோ அல்லது மூடி மறைக்கவோ விரும்பாமல் மாறாக அவர் இதை அவர் அதை நம்முடன் பகிர்ந்துக்கொள்ளும்படி தெரிந்துக்கொண்டார், அதினாலேயே நாமும் அதைக் கண்டுக்கொள்ள முடிகிறது !

என்னுடைய ஜெபம்

முன்னணையின் தேவனும் , இவ்வுலகம் யாவற்றையும் ஆளுகை செய்பவரும் , உமது மகிமையான மற்றும் பரிசுத்தமான நாமத்தைப் துதித்து தேவதூதர்களுடன் என் இருதயத்தையும் என் சிந்தனையையும் ஒன்றாக இணைக்கிறேன். உம்முடைய அன்பு மிகவும் ஆழமானது, இதைக் கண்டு நான் மிகவும் வியப்படைகிறேன். மேய்ப்பர்களுக்கு இயேசுவைக் காண்பிக்க நீர் எந்த ஒரு அடையாளத்தையும் தேர்ந்தெடுத்திருக்கலாம், ஆனால் நீர் முன்னணையைத் தேர்ந்தெடுத்தீர். இதுபோன்ற பொதுவான இடத்தில் உம்முடைய நேச குமாரனை வெளிப்படுத்தியதற்காக நன்றி, அதினால் உம்முடைய அடையாளத்தைக் கண்டுபிடித்து உம் வீட்டிற்கு வர முடிந்தது. என் அன்புடன் இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து