இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஸ்தோத்திரம் என்பது நம் உதடுகளில் இருந்து மட்டும் வரக்கூடாது. தேவன் நமக்கு அருளின அனைத்து ஆசீர்வாதங்களையும் அங்கீகரித்து, நமது ஆத்தும ஆழத்திலிருந்து ஸ்தோத்திரம் வெளிப்பட வேண்டும். தேவன் பரிசுத்தராகவும் ,மகத்துவமுள்ளவராகவும் , வல்லமையுள்ளவராகவும் இருப்பதால், அவரை ஸ்தோத்திரிப்பதற்கு இன்னும் அநேக காரணங்கள் உள்ளன. அவர் எங்களிடம் மிகவும் கிருபையை வெளிப்படுத்தினார் !

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும்,அன்புமுள்ள பிதாவே , சிருஷ்டிப்பின் உம்முடைய ஈவுக்காக நான் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். உம்மை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது என்ற சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கிய உம்முடைய அன்பிற்காக நான் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். ஆபிரகாமை விசுவாசத்தின் துவக்கமாகவும் , இயேசு வரவிருக்கும் ஜனமாகவும் தேர்ந்தெடுத்ததற்காக நான் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். இயேசுவை அனுப்பியதற்காக நான் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். என் பாவங்களுக்கு பலியாக கொடுத்ததற்காக நான் உன்னை ஸ்தோத்தரிக்கிறேன். அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, என் பாவம் மற்றும் மரணத்தின் மீது வெற்றி பெற்றதற்காக நான் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். உமது கிருபையின் நற்செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்டவர்களுக்காக நான் உன்னை ஸ்தோத்தரிக்கிறேன். என் மூலமாகவும் எனக்காகவும் நீர் நடப்பித்த கிரியைகளுக்காக ஸ்தோத்தரிக்கிறேன். வரும் நாட்களில் என் வாழ்வில் நீர் செய்யப் போகிற சகல உபகாரங்களுக்காகவும் நான் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் , என் அப்பா பிதாவே தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வவல்லமையுள்ள தேவன் என்பதால் நான் துதிக்கிறேன். என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே , நான் உமக்கு ஸ்தோத்திரங்களை செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து