இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு தேவனின் மிகப்பெரிய செய்தி. அவர் தேவனின் அன்பு, இரக்கம் , கிருபை ஆகியவற்றைப் பறைசாற்றுவதும், அறிவிப்பதும் மட்டுமல்லாமல் , அதை வெளிப்படுத்தியுமிருக்கிறார்.இயேசுவானவர் மாத்திரமே தேவனை நமக்கு முழுமையாக வெளிப்படுத்த முடியும், ஏனென்றால் அவர் பிதாவுடன் ஒன்றாக இருக்கிறார்.ஆயினும், நற்செய்திகளில் இயேசு ஊழியம் செய்வதை நாம் "பார்க்கும்போது", நாம் தேவனை பார்க்கிறோம். தேவன் நம்மைப் பற்றி எப்படி உணருகிறார் என்பதை நாம் அறிய விரும்பினால், நாம் செய்ய வேண்டியதெல்லாம், இயேசு எப்படி மற்றவர்களுக்கு ஊழியம் செய்கிறார் என்பதை நோக்கி பார்ப்பதுதான்.தேவன் நமக்காக என்ன செய்வார் என்பதை நாம் அறிய விரும்பினால், மற்றவர்களை ஆசீர்வதிக்க இயேசு என்ன செய்கிறார் என்பதை நாம் கவனிக்கலாம். பிதாவின் இருதயத்தை பார்ப்பதற்கு இயேசுவே ஒரு வழியாய் இருக்கிறார் . ஆகவே, இந்த ஆண்டு முடிவடையும் போது அல்லது இந்த ஆண்டின் பிற்பகுதியில் நீங்கள் நிற்கும்போது, ​​வரும் ஆண்டில் இயேசுவை பற்றிய நற்செய்திகளில் (மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் மற்றும் யோவான்) அதிக நேரம் செலவழிப்பதன் மூலம், அவரை நன்கு அறிந்துகொள்ள ஏன் உறுதியளிக்கக் கூடாது? அப்படி நீங்கள் செய்தால், தேவனை நன்கு அறிவீர்கள்!

என்னுடைய ஜெபம்

பிதாவே , இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தின் மூலமாய் உமது இருதயத்தின் காரியங்களை பார்க்க எனக்கு உதவியதற்காக உமக்கு நன்றி. இயேசுவை இன்னுமாய் அறிந்து, புரிந்துகொண்டு, அதிக ஆர்வத்துடன் பின்பற்றுவதன் மூலம், நான் உம்மை அதிகமாய் தேட முற்படும்போது தயவுசெய்து என்னை ஆசீர்வதியும். உம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன், என் தேவனே . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து