இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வருஷம் போய்விட்டது , முடிந்தது, கடந்துவிட்டது. எங்களால் அதை மீட்டெடுக்கவோ அல்லது திரும்பபெற்றுக்கொள்ளவோ முடியாது. அது நம்மைக் கொண்டு வந்திருக்கும் பெரிய தூரத்தில் நாம் சார்ந்திருக்க முடியாது. நாளை விடியல் , அது இன்னொரு புதிய நாளாகவும், ஒரு புதிய வாய்ப்பாகவும், இயேசுவை ஆண்டவராகக் காட்டுவதற்கான நேரமாகவும் இருக்கும். தேவன் ஏற்கனவே எதிர்காலத்தை தன் கரங்களில் கொண்டிருப்பவர் என்பதையும், அங்கு நம் பயணத்தில் நமக்கு புது பெலனையும், உற்சாகத்தையும் வழங்குவதாக வாக்களித்திருக்கிறார் என்பதையும் அறிந்து, முன்னோக்கி பயணிப்போம்.

என்னுடைய ஜெபம்

நித்தியானந்த தேவனே, கடந்த ஆண்டு நான் செய்த தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளவும் , ஆனால் அவற்றை குறித்து அதிகமாக சிந்திக்காமல் இருக்கவும் எனக்கு உதவியருளும் . கடந்த ஆண்டில் நான் செய்த சாதனைகளை நினைத்து அங்கேயே தங்கிவிடாமல் , அடியேனை கொண்டும், அடியேன் மூலமாகவும், உம்முடைய ஊழியத்தை மேலும் அதிகரிக்க அடியேனுடைய தாலந்தை பயன்படுத்தியருளும் . நேற்று, கடந்த மாதம் அல்லது கடந்த ஆண்டு என்னை காயப்படுத்தியவர்களுடன் சண்டையிடாமல் சமாதானத்தோடே இருக்க எனக்கு உதவிச்செய்யும். அதற்குப் பதிலாக, பிதாவே , உமது பாதையில் என்னை வழிநடத்தி, வருகிற அடுத்த ஆண்டில் உமது வல்லமையான செயல்களைக் காணும்படிஎன் கண்களை திறந்தருளும் . இயேசுவின் நாமத்தினாலும் அவருடைய வல்லமையினாலும் நான் அதைக் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து