இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவானவர் அங்கே இருந்தார். அவர் ஆதியிலே தேவனோடு இருந்தார். ஆனால் சிருஷ்டிப்பை குறித்ததான சாட்சியை விட அவர் மேலானவர் ; அவர் எல்லாவற்றையும் உருவாக்கினார்! மனித மாம்சத்திற்கு தன்னை தாழ்த்தி , சிலுவையின் கொடூரமான மற்றும் வேதனையான மரணத்தை மேற்கொள்ள அனுமதித்த இயேசு, ஆதியிலே அவர் வார்த்தையாக இருந்தார். அந்த வார்த்தையினாலே உலகம் உண்டாக்கப்பட்டது. அவர் அதை செய்தார். அது அவருடையது. ஆனாலும் அவர் மனிதனை மீட்டுக்கொள்ள பூமிக்கு வந்து மரித்தார் . இன்னும் விஷேசமாக , உங்களையும்,என்னையும் மீட்கும்படியாக வந்தார் . ஆகவே, தேவனைப் பிரியப்படுத்த எப்படி வாழ வேண்டும் என்று அந்த வார்த்தை நம்மிடம் பேசும்போது, ​​​​நாம் அந்த வார்த்தைக்கு அதிக கவனம் செலுத்துவது நல்லது என்று நீங்கள் நினைக்கவில்லையா? இன்னும் மேலாக , நாம் அதை கிரியையினால் காண்பிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள பிதாவே, என்னை இரட்சிக்கும் உமது திட்டம் என்னை சந்தோஷமடைய செய்து அதை நினைத்து என்னை தாழ்த்தும்படி செய்கிறது. எனக்காக உலகத்தைப் படைத்த இயேசுவை நீர் அனுப்புவீர் என்பது என்னுடைய ஞானத்தால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாததை விட மிகவும் அற்புதமானது. அவர் உருவாக்கிய உலகத்திற்கு அவர் தன்னை தாழ்த்தி அனுமதித்தார் என்பது என் கற்பனைக்கு மேலானது . நான் உம்முடன் வாழ வேண்டும் என்பதற்காக அவர் எனக்காக மரித்தார் என்பது என் இருதயத்தை மிகவும் நெகிழச் செய்தது ! அவருடைய போதனைகள் மற்றும் உம் சித்தத்தின் அடிப்படையில் என் வாழ்க்கையை நான் வாழ முற்படும்போது தயவுக்கூர்ந்து எனக்கு உதவுங்கள். ஜீவனுள்ள வார்த்தையாகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து