இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் இயற்கை உருவானதைப் பற்றி பேசுகிறோம், ஆனால் நமது பிரபஞ்சத்தின் சிருஷ்டிப்பின் பின்னால் உள்ள வல்லமையாகிய இயேசுவை வேதம் அடையாளப்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் தமது வார்த்தையின் வல்லமையினால் நம் உலகத்தை நிலைநிறுத்துகிறார். அவர் சிலுவையில் தம் ஜீவனை ஜீவ பலியாக கொடுத்து நம்மை இரட்சித்தது மட்டுமல்லாமல், இப்போது அவர் அன்பான கிருபையின் வார்த்தையின் வல்லமையினால் நம் பிரபஞ்சத்தை நிலைநிறுத்துகிறார். அவர் தமது வார்த்தையை கொண்டு போதிப்பதின் மூலம் அவர் நம்மை ஆவிக்குரிய பிரகாரமாக நிலைநிறுத்துகிறார் . நம்மிடமும் நமது பிரபஞ்சத்திடமும் பேசும் இந்த வார்த்தை, தேவனுடைய தன்மையின் சொரூபமுமாயிருக்கிறார். அவர் பூமியில் இருந்தபோது நம்முடைய பாவங்கள், தோல்விகள் மற்றும் குறைபாடுகளிலிருந்து நம்மை சுத்திகரித்து , மறுபடியுமாய் அவர் திரும்பி வந்து நம்மை நித்திய வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வரை மகிமையில் ஆட்சி செய்கிறார்!

என்னுடைய ஜெபம்

சர்வ வல்லமையுமுள்ள தேவனே , இயேசுவின் வார்த்தையின் அடிப்படையில் உமக்காக வாழ நான் உறுதியளிக்கிறேன், தயவுசெய்து என்னுடனே எப்பொழுதும் இருப்பீராக . இயேசுவின் போதனையை நான் புரிந்துகொள்ளவும் அதைப் பயன்படுத்தவும் முயலும்போது எனக்கு உதவுங்கள். அதற்கும் மேலாக, அன்பான பிதாவே , அவருடைய {இயேசுவின் }வார்த்தைகள் மூலம் உம்மை அறிந்துகொள்ள எனக்கு உதவியருளும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து