இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் கர்த்தரை நெருங்கி, அவருக்காக வாழும்போது, ​​இரண்டு அற்புதமான ஆசீர்வாதங்கள் நமக்கு வருகின்றன. முதலில், இயேசுவின் அன்பான தியாகத்தால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு அந்த பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப் படுத்தப்படுவதைக் காண்கிறோம். இரண்டாவதாக, இந்த அற்புதமான சுத்திகரிப்புக்கும்,மன்னிப்புக்கும் நாம் தனியாக இல்லை என்பதைக் காண்கிறோம். கிறிஸ்துவுக்குள் உள்ள நமது சகோதர சகோதரிகளும் இந்த சுத்திகரிப்பில் பங்கு கொள்கிறார்கள்.தேவனைத் தேடும் மக்கள் ஒருவரையொருவர் அவர் சமூகத்திலே கண்டடையும் போது, ​​விசுவாசிகளிடையே மெய்யான ஐக்கியம் வளருகிறது (1யோவான் 1:1-4). இந்த ஐக்கியம் கட்டாயப்படுத்தப்பட்டதோ அல்லது திட்டமிடப்பட்டதோ உண்டானது அல்ல, அது பரலோகத்திற்குரியது . நம் வாழ்நாள் முழுவதும் நாம் ஒவ்வொரு கணமும் பரிசுத்தமாக வாழ முடியாது, ஆனால் நாம் நம்முடைய போராட்டங்களையும் பாவங்களையும் மறைக்காமல் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தேவனிடம் அறிக்கையிட்டு நடக்கும்போது அது நமக்கு மன்னிக்கப்பட்டு, பரிசுத்தமான தேவனின் பிள்ளைகளாக வாழ்கிறோம் (1 யோவான் 1:5-7; கொலோசெயர் 1:22-23).

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் பரிசுத்தமான தேவனே , மாசற்ற , கனத்துக்குரிய மற்றும் பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்வதன் மூலமாக இயேசுவின் தியாக மரணத்தின் அன்பை நான் கனம் பண்ண விரும்புகிறேன். இயேசுவின் இரத்தத்தின் மூலமாக என் பாவங்களை முற்றிலுமாய் கழுவி, இன்னுமாய் அவருக்காக வாழ விரும்பும் மற்றவர்களிடம் என்னை வழிநடத்தியதற்காக நன்றி. உம்மையும், உம் குமாரனையும், மற்ற விசுவாசிகளையும் அதிகம் தெரிந்துகொள்ள என் ஆவிக்குரிய தாகத்தை தீவிரப்படுத்துங்கள். இயேசுவின் நல்ல நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து