இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எது மிகவும் முக்கியமானது? நாம் ஜெயம் கொள்ள மற்றும் பலனளிக்க வேண்டுமென்றால், நமது அன்றாட வாழ்வில் முன்னுரிமைகள் முக்கியம். நம்முடைய சீஷத்துவத்திலும் இதுவே உண்மை. முக்கியமான, அத்தியாவசியமான மற்றும் மிக முக்கியமானவற்றில் கவனம் செலுத்த விரும்புகிறோம். இன்றியமையாததை பவுல் நமக்கு நினைவூட்டுகிறார்: அன்பான கிரியைகளில் விசுவாசம் தன்னை வெளிப்படுத்துகிறது. அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். (யாக்கோபு 2:17). உற்சாகமான மற்றும் அன்பான ஊழியத்தில் நம்முடைய விசுவாசம் வெளிப்பட வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

என்னுடைய ஜெபம்

சர்வ வல்ல தேவனே, இன்றியமையாதவற்றை நான் இழந்து, மாம்சம் சார்ந்தவற்றில் கவனம் செலுத்திய நேரங்களுக்காக என்னை மன்னியுங்கள். மற்றவர்களுக்கு அன்பான ஊழியம் செய்வதை விட எனது ஆர்வங்களும் கவலைகளும் எனக்கு முக்கியமானதாக இருந்த காலங்களில் என்னை மன்னியுங்கள். இயேசுவின் அன்பை மற்றவர்கள் அறியும்படி, இன்று நான் ஊழியம் செய்ய விரும்பும் ஜனங்களைப் பார்க்க எனக்குக் மனக்கண்களைக் கொடுங்கள். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து