இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஞானம் என்பது மற்றவர்களிடம் நாம் மதிக்கும் நுட்பமான தன்மை மற்றும் அந்த குணத்தை நமக்குள் வளர்த்துக் கொள்வதை மிகவும் கடினமாக எண்ணுகிறோம் .ஆயினும் உண்மையில் கேட்கிற யாவர்க்கும் சம்பூரணமாய்க் கொடுப்பேன் என்று தேவன் வாக்களித்திருக்கிறார். ஆனால் கேட்பதன் ரகசியத்தை நினைவில் கொள்ளுங்கள் - கேட்பது, தேடுவது மற்றும் தட்டுவது. நீதிமொழிகள் 2ஆம் அதிகாரத்தை வாசிப்போமானால் புரிந்துகொள்ள முடியும்.மற்ற எல்லா உடைமைகளுக்கும் மேலாக தேடி அதை பொக்கிஷமாக எண்ணினால் மாத்திரமே ஞானம் நம்முடையது. தேவன் அதை வழங்க விரும்புகிறார், ஆனால் ஆவிக்குரிய ஞானத்தை பெற்றுக்கொள்ள முதலாவது அதை பொக்கிஷமாக என்ன வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

என்னுடைய ஜெபம்

எல்லா நன்மையான ஈவுகளையும் கிருபையாய் அளிப்பவரே , தயவு கூர்ந்து ஞானத்தால் இன்றே அடியேனை ஆசீர்வதியும். எனது எல்லா முடிவுகளிலும் உமது சித்தத்தை பிரதிபலிக்கவும், உமது மகிமைக்காக ஜீவிக்கவும் விரும்புகிறேன் . நான் என் விருப்பங்களைச் செய்யும்போது உமது ராஜ்யம் என் இருதயத்தை வழிநடத்தி , உமது நல்ல ஆவி என்னை உமது செவ்வையான பாதையில் நடத்த உதவிச் செய்யும். பிதாவே , உம் உதவியின்றி என் நடைகளை என்னால் வழிநடத்த முடியாது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன், எனவே இந்நாளில் எனக்கு ஞானத்தைத் தாரும் . இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து