இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவுக்குள்ளாய் நாம் அனுபவித்ததை நம்மால் அடக்கி வைக்க முடியாது. நாங்கள் கேள்விப்பட்டதைப் குறித்து மற்றவர்களுக்கு சொல்லாமல் இருக்க முடியாது. எந்த இராஜாவானாலும் , எந்த அச்சுறுத்தலாலும், தேவனுடைய சத்தத்தை அவரது மக்களின் சாட்சியின் மூலம் கேட்கப்படுவதை முழுமையாக நிறுத்த முடியவில்லை. கிறிஸ்துவுக்குள்ளான நமது அனுபவங்கள் மற்றும் கிறிஸ்துவுடனான நம் உறவின் மூலமாய் இருதயம் நிரம்பி வழிவதினால் நம்முடைய விசுவாசத்தை பகிர்ந்துக்கொள்ளுகிறோம். இந்த வழியில் நாம் நமது நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும்போது, ​​நமது சாட்சியின் நம்பகத்தன்மை நிராகரிக்கப்படலாம் அல்லது கேலி செய்யப்படலாம், ஆனால் அதை அழிக்க முடியாது. நம் வாழ்வில் தேவனுடைய செயலை அனுபவித்திருக்கிறோம். நாம் எப்படி அமைதியாக இருக்கிறோம்? நம்மால் முடியாது!

என்னுடைய ஜெபம்

எல்லா தேசங்களுக்கும் தேவனே , உம்முடைய ஜனங்களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் பெலமுள்ள சத்திய வார்த்தைகளைக் கொடுங்கள், குறிப்பாக அவர்கள் ஏளனத்தையும் விரோதத்தையும் எதிர்கொள்ளும்போது. தயவு செய்து என்னைச் சுற்றியுள்ள காணாமற்போன மக்களை எவ்வாறு அடைவது என்பதை நன்கு அறிய எனக்கு உதவுங்கள், மேலும் எங்களின் சுவிசேஷத் தலைவர்கள் இன்று நாங்கள் வாழும் உலகில் காணாமற்போன மக்களை அடைவதற்கான உம்முடைய வழியை ஆராய்ந்து அறிந்துகொள்ள முயற்சிக்கும்போது அவர்களை ஆசீர்வதியுங்கள். என் பாவங்களையும் , இவ்வுலகம் அனைத்து மக்களின் பாவங்களுக்கு பரிகார பலியாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து