இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இன்று உலகில் பல திறமையான மற்றும் வெற்றிகரமான கிறிஸ்தவர்கள் இருந்தாலும், அவர்கள் தேவனுடைய கிருபையை , நம்பிக்கையை மற்றும் வல்லமையை குறித்து பிரசங்கிக்கும் செய்திக்கான பாத்திரங்கள் மாத்திரமே . தேவனுடைய செய்திக்கான பாண்டங்களின் மீது நமது கவனம் ஒருபோதும் இருக்கக்கூடாது. மாறாக, மிக முக்கியமானது என்னவென்றால், எந்த சூழ்நிலையிலும் தேவனுடைய வார்த்தையை நேர்மையாக கூறுபவரே மிக அவசியம் , இதனால் செய்தியை பிழையில்லாமல் இல்லாமல் காண முடியும். தேவனின் வல்லமையே நம்மை முற்றிலும் தாங்குகிறது, நம்முடைய பெலன் அல்ல, நாம் தேவனின் கரங்களில் ஒரு பாத்திரமாக, ஒரு அவயமாக இருக்கிறோம் .

என்னுடைய ஜெபம்

சர்வ வல்லமையுள்ள தேவனே, கிருபையின் ஊழியத்தில் உமது பங்காளியாக மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய என்னைப் பயன்படுத்தியதற்காக நன்றி. உமது குமாரனிடத்தில் நீர் எங்களுக்குக் கொடுத்த உமது சத்தியத்தின் மகிமையையும், கிருபையையும் இன்னும் பரிபூரணமாகக் காண என்னுடைய ஊழியம் அவர்களுக்கு உதவியாய் இருக்கட்டும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து