இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உண்மையான தொழுகை என்பது ஒரு ஈவு . தேவன் ஆவியாய் இருக்கிறார், அவர் பரிசுத்தராக இருப்பதால், அவருடைய பரிசுத்த ஆவியின் ஈவும் ஆசீர்வாதமும் இல்லாமல் நாம் அவரை முழுமையாக கிட்டச்சேர முடியாது. நாம் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்று தேவனால் பிறந்தபோது அவருடைய ஆவியைப் பெற்ற கிறிஸ்தவர்களாகிய நாம் இப்போது அவருடன் சம்பாஷித்து மற்றும் ஆவிக்குள்ளாய் ஆவியினால் அவரை தொழுதுக்கொள்ளலாம் .

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே உமது ஆவியின் ஈவினால் நான் உம்முடைய பிள்ளையாக கிட்டிச் சேர்கிறேன். உம்முடைய ஆவியை எனக்கு வழங்கியதற்காக உமக்கு மிக்க நன்றி, அதனால் நான் உம்மை நம்பிக்கையுடன் அணுகி என் இருதயத்தின் கவலைகளை நீர் கேட்கிறீர்கள் என்பதை அறிய முடியும். தயவுகூர்ந்து என் இருதயத்தினாலும் , என் வார்த்தைகளினாலும், என் கிரியைகளினாலும் செய்யும் தொழுகையை ஏற்றுக்கொள்ளும் . இன்று நான் கையிட்டு செய்யும் காரியங்களினாலும் உனக்குப் மகிமை உண்டாவதாக . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து