இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"இயேசு தேவனுடைய குமாரன்." மூன்று எளிய வார்த்தைகள். இருப்பினும், நாம் அவற்றை விசுவாசித்து அறிக்கைப்பண்ணும் போது அவை எளிய வார்த்தைகளை விட மிகவும் அதிகம்! அந்த வார்த்தைகள் நம்முடைய இருதயங்களை தேவனுக்கு திறக்கும் வாசலாய் இருக்கிறது . எனவே, இன்று, நீங்கள் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று ​​உணர்வுபூர்வமாகவும் தாமாகவே முன் வந்து ஒப்புக்கொள்ளும்போது, தேவனை உங்கள் இருதயத்தில் வரவேற்கிறீர்கள் . உங்களோடும் உங்களுக்குள்ளும் ஜீவிக்க ஆசைப்படுகிறார் . நீங்கள் இயேசுவைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்டு அவரைப் பின்தொடரும்போது, ​​பரிசுத்த ஆவியானவர் உங்களை உங்கள் ஆண்டவரைப்போல மறுரூபமக்கும் கிரியையில் ஈடுபடுகிறார் (2 கொரிந்தியர் 3:18). நாம் குமாரனை அறிக்கையிட்டு அவருக்காக வாழ முற்படுவதால் (யோவான் 14:21, 23, 26) இன்னுமாய் நீங்கள் இயேசுவுக்கு செவிசாய்த்து அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் , அவரும் பிதாவும் பரிசுத்த ஆவியுடனே (நம்முடைய ஆறுதலளிப்பவர் உதவி செய்பவர் ) (யோவான் 14:21, 23, 26) என்றும் நம்முடனே வாசம் செய்வார்கள் என்றும் அவர் நமக்கு உறுதியளிக்கிறார்!

என்னுடைய ஜெபம்

பிதாவே , நான் என் வாழ்க்கையை உமது குமாரனை என் இதயத்தில் மையப்படுத்தி வாழ விரும்புகிறேன். இயேசு தேவனுடைய குமாரன் என்பதை நான் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறேன். அவர் என் ஆண்டவரும் என் இரட்சகரும் ஆவார். என்னில் வாழும் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை விசுவாசித்து , உமக்கு ஸ்தோத்திரம் மற்றும் நன்றிகளை செலுத்துகிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்,ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து