இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நான் துரிதமாக முடிவுகளை , அர்ப்பணிப்புகளை மற்றும் திட்டங்களைச் செய்தபோது என்னுடைய மிகப் பெரிய தவறுகளை நான் செய்துவிட்டேன் - நான் என்ன தீர்மானிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன சொல்ல வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள நேரத்தை நான் அனுமதிக்கவில்லை. நல்யோசனை மற்றும் புரிதல் ஆகிய இவைகள் கற்றல் மற்றும் அனுபவத்தின் மூலம் ஓரளவு பெறப்பட்டாலும், அவை தேவனுடைய ஈவாகும். நம்முடைய தேவைக்கேற்ப , குறிப்பாக நமக்கு தேவனிடமிருந்து விரைவாக பதில்களை பெறமுற்படும்போது இந்த ஈவு வராது . நல்யோசனை என்பது பரிசுத்த ஆவியின் மூலமாய் தேவனின் வழிகாட்டுதலை பொறுமையுடன் தேடி , விசுவாசித்து மற்றும் காத்திருப்பது மற்றும் வெகுமதிகள் அல்லது செலவுகள் எதுவாக இருந்தாலும், அவருக்காக பரிசுத்த குணத்துடன் வாழ வேண்டும் என்ற ஏக்கத்தில் நிறைவுற்ற உள்ளத்தில் இருந்து வருகிறது.

என்னுடைய ஜெபம்

பிதாவே என்னை மன்னியுங்கள். நான் சில சமயங்களில் பரிசுத்தமான குணம் கொண்டவனாக இருப்பதை விட ஒரு "பாத்திரம்" என்று எனக்கு தெரியும். கூட்டத்தில் விளையாடும் என் சுயநல ஆசையை மன்னியுங்கள். நான் சில சமயங்களில் விவேகம், புரிதல் மற்றும் ஒருமைப்பாடு கொண்ட நபராக இருப்பதை விட நகைச்சுவையாகவும் ஏற்றுக்கொள்ளவும் முயற்சிப்பதாக ஒப்புக்கொள்கிறேன். அன்புள்ள ஆண்டவரே, கூட்டத்தினரால் அவசரம் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் போன்ற சோதனைகளைக் காணவும், நேர்மைக்கான உமது பாதையைக் கண்டறியவும் தயவுசெய்து எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து