இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய தேவனாகிய கர்த்தராகிய தேவனைப் பற்றிய மிக ஆச்சரியமான விஷயங்களில் ஒன்று, அவர் மிகவும் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர் . ”வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்து விடாதீர்கள்”இந்த கூற்று உண்மைதான். நாம் பாவம் செய்யும் போது மன்னிக்கவும் பரிசுத்தப்படுத்தவும் அவர் விரும்புகிறார், மாறாக நம்மை அவர் விமர்சனம் செய்யவோ அல்லது தண்டிக்கவோ விரும்பவில்லை . நாம் செய்த பாவத்திற்காக மெய்யாகவே மனங்கசந்து அதிலிருந்து நம்முடைய மனதை மாற்றும்போது மன்னிப்பு, சுத்திகரிப்பு மற்றும் மீட்பு ஆகியவற்றுடன் அவருடைய கிருபை நம்மை ஆவலாய் வரவேற்கிறது . ஆனால் தேவனுக்குள் வாழும் வாழ்க்கை என்பது முன்னோர்களின் பாரம்பரியங்களை பின்பற்றுவது அல்லது இருதயப்பூர்வமாக இல்லாத வெற்று மத காரியங்கள் சடங்குகளை கடைப்பிடிப்பது அல்ல. நம் மனந்திரும்புதல் என்பது , தேவனிடமாய் முழுவதுமாய் திரும்பி, அவருக்காக வாழ உண்மையாக அர்ப்பணித்த இருதயத்திலிருந்து துவங்க வேண்டும்!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , நான் பாவம் செய்யும்போது, ​​என் பாவத்தை நீர் எவ்விதமாய் காண்கிறீர் அது போல அடியேனும் காண எனக்கு உதவிச் செய்யும் . நான் உமக்கு விரோதமாக கலகம் செய்தபோது என் இருதயம் என் பாவத்தை உடைக்க விரும்புகிறது . உமது கிருபையை நான் எப்பொழுதும் அலட்சியமாகவோ அல்லது விருதாவாகவோ இருக்க விரும்பவில்லை. இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உம்முடைய கிருபையை கொண்டு என்னை மீட்கவும், மன்னிக்கவும், பரிசுத்தப்படுத்தவும் நீர் செலுத்திய அதிக விலைக்காக நான் எப்போதும் உம்மை போற்ற விரும்புகிறேன். அவருடைய நாமத்தினாலே ஜெபிக்கிறேன்.ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து