இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த வசனத்தில் உள்ள இந்த வார்த்தைகளைக் கேட்டு, தாங்கள் சகித்துக் கொண்டதன் காரணமாக தங்கள் ஆவியில் நொறுங்கிப் போவதை உணர்ந்தவர்களுக்காக என் இருதயம் உடைகிறது. நீங்கள் சுமக்கும் வலி, வேதனை , இழப்பு, துக்கம் மற்றும் உடல்ரீதியான சேதங்களை தேவன் வெறுக்கிறார். ஆவிக்குரிய வகையில் , உணர்ச்சி பிரகாரமாக மற்றும் மாம்ச ரீதியான பாதுகாப்பைக் காண தங்கள் திருமண பந்தத்தை விட்டு வெளியேற வேண்டியவர்களுக்காக நாங்கள் துக்கப்படுகிறோம். நாம் அழிந்துப்போகிற உலகில், மக்கள் கைவிடப்படும்போதும், நம் அநீதியான நடத்தைகளால் நம் வாழ்க்கையை நாமே உடைக்கும்போதும் தேவன் அதை வெறுக்கிறார். நமது ஆவியில் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். சுயநலம் மற்றும் தீய காரியங்களினால் நம் இருதயம் கெட்டுப்போவதை நாம் ஒருபோதும் விரும்பவில்லை. நமக்கு நெருக்கமானவர்களை அவமதிப்பு, புறக்கணிப்பு அல்லது துஷ்பிரயோகம் செய்வதன் மூலமாக நம்மீது உள்ள நம்பிக்கையை நாம் உடைக்க வேண்டாம் என்று விரும்புகிறோம். விவாகரத்து மற்றும் அதின் விளைவுகளால் மக்கள் உடைந்து போகும்போது, ​​​​அந்த காரணங்களை கண்டுபிடித்து, அவர்களைச் சேர்த்து, அவர்கள் குணமடைய மறுபடியுமாய் தேவனின் குடும்பமாகிய வீட்டிற்கு அழைத்து கொண்டு வருவோம். விவாகரத்து பெற விரும்பும் பெற்றோருக்கு இடையில் சிக்கிய பிள்ளைகளை குறிப்பாக பாதுகாப்பாகவும் மற்றும் ஆதரவாக இருப்போம். தேவனானவர் விவாகரத்தை முற்றிலுமாய் வெறுக்கிறார், அதற்கு என்ன காரணம் என்பதை நினைவில் கொள்வோம், ஆனால் "விவாகரத்து ஆனவர்களை நான் வெறுக்கிறேன்" என்று அவர் சொல்லவில்லை. நாம் மெய்யாக மனந்திரும்பி, நம் வாழ்க்கையை தேவனிடம் திருப்பும்போது எல்லா பாவங்களும் நமக்கு மன்னிக்கப்படும் (1 யோவான் 1:5-10, 2:1-2).

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , தயவுசெய்து எங்கள் வார்த்தைகள் உறுதி உள்ளதாகவும் , எங்கள் அர்ப்பணிப்பு எப்பொழுதும் நீடித்ததாகவும், எங்கள் வாழ்க்கையானது உமக்கும், நாங்கள் ஒருவருக்கொருவர் அளித்த வாக்குறுதிகளில் உண்மையுள்ளவர்களாக இருக்கும்படி உதவிச் செய்யும் . அநியாயமாகவும், துரோகமாகவும், உண்மையற்றவர்களாக நடந்து கொண்ட வாழ்க்கைத் துணையால் இருதயம் நொறுக்கப்பட்டவர்களை தயவுக்கூர்ந்து அவர்களை தேற்றி ஆசீர்வதித்தருளும். ஆழமான விவாக பந்தங்களை கொண்ட அநேக அழகான எடுத்துக்காட்டுகளை வேதாகமத்தில் கொடுத்ததற்காக உமக்கு நன்றி. வாழ்க்கையில் தடுமாறி, ஆனால் மறுபடியுமாய் உம்மிடம் திரும்பி வந்து, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு , தேவனுக்கு பிரியமான உறவுகளையும் திருமணங்களையும் கட்டியெழுப்பியவர்களுக்காக உமக்கு கோடான கோடி நன்றி. தயவு செய்து என்னையும் என் வீட்டையும் எங்களுக்குப் பின்வரும் சந்ததிகள் யாவும் விசுவாசத்தில் நிலைத்திருக்கும் ஆவியைக் கொண்டு ஆசீர்வதித்தருளும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து