இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பிரிவை குறித்து நாம் எப்பொழுதும் பயப்படுகிறோம் பிள்ளையையோ, பெற்றோரையோ உடன்பிறந்த சகோதர சகோதரிகளையோ , மனைவியையோ , நண்பனையோ அல்லது தேவனிடமிருந்தும் கூட பிரிவை கண்டு அஞ்சுகிறோம். இயேசு தேவனிடமிருந்து பிரிவை சகித்ததினால் மாத்திரமே மாம்சத்திலே மனுஷ குமரனாய் வெளிப்பட்டு சிலுவைக்குச் சென்றார் . இயேசுவின் பலியின் காரணமாக, தேவனின் அன்பிலிருந்து நாம் ஒருபோதும் பிரிக்கப்பட வேண்டியதில்லை என்பதை உணர்ந்து கொள்ளுகிறோம் . அவர் பிரிவைச் சுமந்தார், அதனால் நாம் ஒருபோதும் அஞ்ச வேண்டியதில்லை !

என்னுடைய ஜெபம்

எல்லா ஜனங்களுக்கும் மா பெரிதான பிதாவே , என் மீது அன்பு செலுத்தியதற்காக உமக்கு நன்றி. உம்முடைய அன்பிலிருந்து என்னை எதுவும் பிரிக்கமாட்டாது என்று வாக்களித்ததற்காக உமக்கு நன்றி. என் வாழ்வில் உம்முடைய சமூகம் இருப்பதை எனக்கு மேலும் தெரியப்படுத்துங்கள். இவைகளை நான் இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து