இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அநேக வேளைகளில் , அவர் பயன்படுத்துவதற்கு நாம் தகுதியான பாத்திரங்களாக இல்லாவிட்டாலும், தேவன் நம்மைப் எடுத்து பயன்படுத்துவார். தேவன் தனது உன்னதமான மற்றும் பரிசுத்தமான குணாதிசயங்கள் பூர்த்தி செய்யாத நபர்களின் பல உதாரணங்களை பரிசுத்த வேதாகமம் நமக்கு வழங்குகிறது - உதாரணமாக, சிம்சோன் அல்லது மற்ற நியாயதிபதிகளை பற்றி சிந்தியுங்கள்! நாம் செய்தாலும் செய்யாவிட்டாலும் தேவனானவர் பரிசுத்தமான , வல்லமையுள்ள, அற்புதமான தேவனாக வெளிப்படுத்துகிறார் . நாம் வீழ்ந்த உலகில் அவருடைய ஆவிக்குரிய பணியைச் செய்வதற்கு அவருடைய கரங்களில் ஆயத்தமான கருவிகளாக இருப்போம், அதனால் உலகம் அவருடைய பரிசுத்தத்தை நம் மூலமாகவும், நம் வாழ்விலும், நமது நடத்தைகளிலும் வெளிப்படுத்துகிறது. அவருடைய ஊழியத்திற்காகவும் அவருடைய மகிமைக்காகவும் நம்மையே முற்றிலுமாய் அர்ப்பணிப்போம்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள பிதாவே, உம்முடைய கிருபையினால் மாத்திரமல்ல, எங்களின் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களினால் வெளிப்படுத்தப்பட்ட எங்களைத் சுத்திகரித்து , எங்களைப் பரிசுத்தமாக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். உமது பரிசுத்த ஆவியின் வல்லமையால் எங்களில் சுத்தமான இருதயத்தை உருவாக்கி, நீதியுள்ள ஆவியை எங்களில் புதுப்பித்தருளும். பரிசுத்தமும் வல்லமையுமான தேவனே, எங்கள் வாழ்க்கை உமக்கு துதியின் பரிசுத்த காணிக்கைகளாக இருக்கட்டும். இயேசுவின் நாமத்தினாலே எங்களையே முழுமையாய் அர்ப்பணித்து உம்மை துதித்து ஜெபிக்கிறோம் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து